செய்திகள்

மீண்டும் திறக்கப்படும் யாழ்.பல்கலைக்கழகம்!

univer

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலை, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் எதிர்வரும் 13ம் திகதி மீண்டும் கல்வி நடவடிக்கைக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

அடையாள அட்டையை மீட்கப் போய் உயிரை விட்ட மாணவன்! யாழில் பரிதாபம்!

bodyd

யாழ்ப்பாணம்  மானிப்பாய், வேலக்கைப் பிள்ளையார் ஆலய கேணிக்குள் விழுந்து மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவன் மானிப்பாயைச் சேர்ந்த 17 வயதானவர் என்று தெரியவருகின்றது.

Read More »

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் குறித்­து தீவிர கவனம் – அமெரிக்கா அறிவிப்பு!

thomas-shannon-600x400

இலங்­கை­யின் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் குறித்­தும், போருக்­குப் பின்­ன­ரான நல்­லி­ணக்­கச் செயற்­பா­டு­கள் தொடர்­பி­லும் நாம் தீவிர கவ­னம் செலுத்தி வரு­கின்­றோம். 2015ஆம் ஆண்டு ஏற்­ப­டுத்­தப்­பட்ட நல்­லாட்சி அர­சின் மூலம், அனைத்து இன மக்­க­ளுக்­கு­மான சுதந்­தி­ரம் உறு­தி­ப்ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்று நினைக்­கி­றோம். போருக்குப் பின்­ன­ரான அபி­வி­ருத்­திச் செயற்­பா­டு­கள் தொடர்­பில் இலங்கை மேற்­கொள்ள வேண்­டி­ய­வை­கள் மற்­றும் அபி­வி­ருத்தித் திட்­டங்­கள் தொடர்­பில் அமெ­ரிக்கா ஆலோ­சனை வழங்கி வரு­கின்­றது. இவ்­வாறு அமெ­ரிக்­கா­வின் அர­சி­யல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உத­விச் செய­லர் தோமஸ் சானொன் தெரி­வித்­தார்.

Read More »

தமிழக மீனவர்கள் நால்வர் கைது!

fish

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 4 பேர் இன்று அதிகாலை இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். தமிழகத்தின் கோட்டை பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் நால்வரும் அவர்கள் பயணித்த விசைப்படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

Read More »

போலி நாணயத்தாள் அச்சிட்ட தம்பதியினர் யாழில் கைது!

arrest

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை – நெளுக்குளம் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து, போலி நாணயத்தாள்களை அச்சிட்ட தம்பதியை கடந்த இரவு யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

Read More »

பிரிக்க முடியாத நாடே உருவாகின்றது – சம்பந்தன் புகழாங்கிதம்!!

ranil-sam

புதிய அரசமைப்பில், பிரிக்க முடியாத நாடே உருவாகின்றது. அதனடிப்படையில், நாட்டில் உள்ள சகல மக்களும் ஒற்றுமையுடனும் சமத்துவத்துடனும் வாழமுடியும்” என்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

Read More »

புதிய நிர்வாகக் கட்டமைப்புத் தொடர்பில் சிந்திக்கிறதாம் அரசு!

ranil

“சில உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து, மாநகர அபிவிருத்தித் திட்டத்தைச் செயற்படக்கூடிய புதிய நிர்வாக கட்டமைப்புத் தொடர்பில் அரசாங்கம் சிந்தித்து வருகிறது. இவை, தேசிய கட்டமைப்புக்கு அமைய செயற்பட வேண்டும்“ என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெவித்தார்.

Read More »

பலத்த பாதுகாப்பின் மத்தியில் சந்திரகாந்தனிடம் விசாரணை!

pillai

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்றது.

Read More »

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்து விபத்து! உயிரிழப்பு ஆறாக அதிகரிப்பு!

acci

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்று, புத்தளம், மதுரங்குளிப் பகுதியில், இன்று காலை 8.15 மணியளவில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ள நிலையில், 43 பேர் காயமடைந்துள்ளனர்.

Read More »

அம்பாறையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது!

amparai

கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் வெலிக்கந்தை பொலிஸ் பிரிவிலுள்ள மொனராத்தென்ன பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வேளையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளாரெனவும் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனரெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

Read More »