செய்திகள்

20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – ஜீ.எல்.பீரிஸ்

GL

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு பெற்றால் மாத்திரம் போதாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி மக்கள் ஆதரவையும் பெறவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் சட்டத்துறை பேராசிரியருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமை குறித்து விரைவில் உயர்நீதிமன்றில் மனித உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு ...

Read More »

ஜனாதிபதிக்கு எதிராக இராஜதந்திர நடவடிக்கை – ததேகூ

tna_CI

இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து இராணுவத்தை விடுவித்து அவர்களை பாதுகாக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி முன்வைக்கவுள்ள யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் குறித்த நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய அங்கத்துவ நாடுகளுடனும் இராஜ தந்திர தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாகவும் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேலும் யுத்தக்குற்றம் இளைத்த இராணுவத்தினர் மீது விசாரணை செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற ஐ.நா.தீர்மானத்தில்  எந்தவிதமான விட்டுக் கொடுப்புக்களையும் கூட்டமைப்பு மேற்கொள்ளாது, என்பதுடன் அத் ...

Read More »

மன்னார் மனித எலும்புக் கூடுகள் அகற்றும் பணி இடைநிறுத்தம்

skeletons-yaalaruvi

மன்னார் சதோச வளாகத்தில் தொடர்சியாக இடம்பெற்று வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணி இன்று திங்கட்கிழமை எவ்வித அறிவித்தல்களும் இன்றி நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வரை 67 தடவைகள் அகழ்வுகள் இடம்பெற்றது. சனி மற்றும் ஞாயிறு தினங்கள் விடுமுறை என்பதினால் இன்று திங்கட்கிழமை காலை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆனால் இன்றைய தினம் அகழ்வு பணிகள் இடம் பெறவில்லை. குறிப்பாக சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் ஆகியோர் அங்கு செல்லவில்லை. இதன் காரணமாக அகழ்வுகள் ...

Read More »

பிரதமருக்குரிய தகுதி ரணிலிடம் இல்லை

625.320.560.350.160.300.053.800.868.160.90

பிரதமர் ஒருவருக்கு இருக்க வேண்டிய தகைமைகள் ரணில் விக்ரமசிங்கவிடம் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட 7 பேர் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த மக்கள் பலம் ஆர்ப்பாட்டத்தின் போது வழங்கப்பட்ட பால் பெக்கட்டுகளில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை நடத்த அரசாங்கத்திடம் வேண்டிக்கொள்வதாகவும் ...

Read More »

இலங்கை தூதுக்குழுவை சந்தித்த மோடி

1536578570-karu-modi-2

இந்திய பாராளுமன்றத்தின் விஷேட அழைப்பின் பெயரில் இந்தியாவிற்கு சென்றுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான குழுவினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினை சந்தித்துள்ளனர். இதன்போது இந்திய பிரதமர் மற்றும் இலங்கை சபாநாயகருக்கு இடையில் சுமார் 45 நிமிடம் நீண்ட இரு தரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து அங்கு ஏற்பட்டுள்ள ஆர்ப்பாட்ட நிலமையின் ​போதும் இலங்கை தூதுக்குழுவிற்காக நேரம் ஒதுக்கியமை தொடர்பில் இந்திய ஊடகங்கள் விஷேட கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்களான நிமல் ...

Read More »

மட்டு மாநகரசபை உறுப்பினர் ஜெயந்திரகுமார் மீது தாக்குதல் முயற்ச்சி.

AACA1B70-6EED-46B4-919C-A4471D9D387A

மட்டக்களப்பு மாநகர சபையின் திருச்செந்தூர் 12 ஆம் வட்டார உறுப்பினரான சீனித்தம்பி ஜெயந்திரகுமார் மீது நேற்று (09) பி.ப 6.50 மணியளவில்  கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதுடன் கொலைமிரட்டல் விடுத்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். அங்கு வந்த  15 பேர் கொண்ட கும்பல் பொல்லு மற்றும் தடிகளுடன் குறித்த உறுப்பினரைத் தாக்குவதற்கு அவரது வீட்டிற்கு வந்தனர் அப்போது  அவர் வீட்டில் இல்லாததால் அவரது வீட்டில் இருந்த அவரது ஆதரவாளர் பூபாலபிள்ளை இந்திரன் என்பவரின் தலையில் பலமாக தாக்கியுள்ளனர் அவர்  இப்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ...

Read More »

7 பேர் விடுதலை: இன்று ஆளுநர் ஆலோசனை

banwarilal-04-1507118978

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முக்கிய ஆலோசனையை இன்று நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று மாலை அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ளவர்கள் பற்றி ஆலோசனை நடந்தது. மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நடந்த இந்த ஆலோசனை 2 மணி நேரம் நடந்தது. ...

Read More »

கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரிற்கு பிணை

download

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டுளளதோடு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுமார் 4.8 கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை இன்றைய தினம்(10) விஷேட மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த 28ம் திகதி அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.இதன் பிரகாரமே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று மன்றில் ஆஜராகினார். ...

Read More »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எப்போது தலைவரானார் சுமந்திரன்?

49D96564-4089-4CA4-844A-03AD0AC6DE43

வடமாகாணசபை முதலமைச்சரும், நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் சிலோன்  ருடே பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் நான் என்னுடைய காலத்திற்குள் பல தடைகள் வந்த போதும் மக்களின்  ஆதரவுடன் தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டிய விடயங்களை  என்னால் முடிந்தவரையில் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சேவை செய்வதே எனது கடப்பாடாகக் கருதி செய்துள்ளேன்  என்று குறிப்பிட்டார்.  சிலோன் ருடே பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி தமிழில் : 1. கேள்வி – உங்கள் முதலமைச்சர் பதவிக்காலம் விரைவில் முடிவடையவிருக்கின்றது. முதலமைச்சர் என்ற வகையில் இது வரையான உங்கள் ...

Read More »

இராணுவத்தினர் மீதான யுத்தக் குற்றத்தை நீக்கவைக்கும் முயற்சியில் மைதிரி

download-2

இராணுவத்தினருக்க எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகளை நீக்கும் திட்டம் ஒன்றை எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிவித்திகலவில் நேற்று(08) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்த திட்டம் தொடர்பில் பலர் விமர்சிக்ககூடும். எனினும் ஐக்கிய நாடுகள் சபையில் இதனை சமர்ப்பிப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதுகிறேன். தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஐ.நா கூட்டத்தில் ...

Read More »