செய்திகள்

நினைவு தினம்: தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது

thileepan

தியாக தீபம் திலீபன் நினைவு தினத்தை எதிர்த்து, பொலிஸார் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கு, செவ்வாய்க்கிழமை (25) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், நாமும் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். தியாக தீபம் திலீபன் நினைவு தினத்தை எதிர்த்து, பொலிஸாரால் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறித்து வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More »

அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

625.0.560.320.160.600.053.800.700.160.90

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, வெகுஜன அமைப்புகளின் ஒன்றிய ஏற்பாட்டில், அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் யாழ் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து ஐந்து மணி வரை நடைபெறவுள்ளது. அநுராதபுரம் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தியே, இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

Read More »

சட்ட சிக்கல்கள் தீர்த்து வைக்கப்பட்ட பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்த பணிப்புரை

ranil

சட்ட சிக்கல்கள் தீர்த்து வைக்கப்பட்ட பின்னர் ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தும்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் முறை குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார். எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதனால் இந்த நிலைமை உருவாகி உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மல்வத்துபீட மஹாநாயக்கர் அதிசங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது ...

Read More »

நாமல் குமார அரசாங்க இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு

f3

ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமாரவை நாளை மறுதினம் அரசாங்க இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா மேற்கொள்ளவிருந்த திட்டங்களை அண்மையில் நாமல் குமார ஊடகங்களிடம் வெளியிட்டிருந்தார். அதனடிப்படையில் இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் நாமல் குமாரவிற்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின் ஒலிப்பதிவு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த ஒலிப்பதிவினை அரசாங்க இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு ஒப்படைக்க ...

Read More »

போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட வேண்டும்

Srikantha-011

போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட வேண்டுமென்பதில் தமது கட்சி உறுதியாக இருப்பதாகவும் அதில் எந்தவித விட்டுக் கொடுப்புக்கும் இடமில்லை என்றும் டெலோவின் செயலாளர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் செயற்குழுக் கூட்டம், கட்சியின் தேசிய அமைப்பாளரும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில், யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்னாலுள்ள வை.எம்.சி மண்டபத்தில், இன்று (24) காலை நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே, ரெலோவின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More »

சமமாக கருதி பொதுமன்னிப்பு பிரேரணையை ஜனாதிபதி முன்வைத்தால் எதிர்ப்போம் என ஐ.நா.விடம் தெரிவித்தோம்

Sumanthiran

அரசியல் கைதிகளையும், போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ வீரர்களையும் சமமாக கருதி பொதுமன்னிப்பு வழங்கும் பிரேரணையை ஜனாதிபதி முன்வைத்தால், அதனை முற்றாக எதிர்ப்போம் என ஐ.நா. பொதுச் செயலாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரேரணை ஒன்றைமுன்வைத்து உரையாற்றவுள்ள நிலையில் அது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், போர்க்குற்றம் இழைத்த இராணுவத்தினர், அதாவது சிலர் செய்த பாரிய சர்வதேச ...

Read More »

ஓமந்தை ரயல் விபத்து ; படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைககு சுவீடனுக்கு கொண்டு செல்லப்பட்டார்

Capture

ஓமந்தை ரயல் விபத்தில் படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் செல்வதற்காக விசேட உலங்குவானூர்தி மூலம் வவுனியாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார். வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கார் மீது ரயில் மோதியதில் படுகாயம் அடைந்த சிறுமியை மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் நாட்டு வைத்தியர் குழாம் விசேட உலங்குவானூர்தி மூலம் இன்று வவுனியா வைத்தியசாலையில் இருந்து அழைத்துச் சென்றனர். யாழில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயில் வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த 16 ஆம் திகதி காலை 10.20 மணியளவில் பாதுகாப்பற்ற ...

Read More »

காணாமல்போனோர் அலுவலகம் சமர்ப்பித்த பரிந்துரைகள் விரைவில் நிறைவேற்றப்படும்

trer

காணாமல்போனோர் தொடர்பில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய பரிந்துரைகள் அடங்கிய இடைக்கால அறிக்கையினை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தோம். அப்பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவினால் காணாமல் போனோர் அலுவலகம் சமர்ப்பித்த பரிந்துரைகள் விரைவாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கின்றோம் என காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார். காணாமல் போனோர் அலுவலகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பில் விஜேதாஸ ராஜபக்ஷ தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின் செயற்பாடுகள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More »

தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம்

thumb_large_thalakai

தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தும் படி கோரி, தலவாக்கலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணியில் ஏற்பாட்டில், இன்று (23) மாபெரும் போராட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பல தோட்டப்பகுதிகளின் தொழிலாளர்களும் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிப் பிரமுகர்களும், ஆசிரியர்கள், மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். இதன்போது மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், ...

Read More »

பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு கோட்டாபய தகுதி வாய்ந்தவர் இல்லை

sarath-fonseka

பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தகுதி வாய்ந்தவர் இல்லை என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று (22) களனி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கோட்டபய ராஜபக்ஷ தற்போது அரசாங்க உத்தியோக்கதர் ஒருவர் இல்லை எனவும் அவர் மக்கள் தற்போது எந்த ஒரு சேவையையும் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். தனது பாதுகாப்பிற்காக 17 பாதுகாப்பு உத்தியோகத்தர்களே வழங்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இதுவரையில் 25 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ...

Read More »