அரங்கம்

பிரபாகரன் இல்லாத நிலையில் தமிழ் மக்கள் ‘அதிகம்’ எதிர்பார்க்க முடியாது – சந்திரிகா

சந்திரிகா

‘என்னுடைய அரசியல்யாப்பு வரைபானது இந்த நாட்டில் நீங்கள் (தமிழ் மக்கள் ) பெற்றுக்கொள்ளக்கூடிய ஏதேனும் தீர்விலும் பார்க்க மிகவும் அதிகமான ( அதிகாரப்பகிர்வினை) கொண்டமைந்திருந்தது. யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அத்தகையதொரு தீர்வை முன்வைப்பதற்கான துணிவு என்னிடமிருந்தது. தற்போது பிரபாகரன் இல்லாத நிலையிலும் யுத்தம் நிறைவுபெற்றுவிட்ட நிலையிலும் தமிழ் மக்கள் அதுபோன்று அதிகமானதை பெற்றுக்கொள்ளப்போவதில்லை” என முன்னாள் சனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க அவர்கள் சுடர் ஒளி பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். ‘அப்படியானால் அதிகபட்சத் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் தமிழர்கள் ஆயுதமேந்திப் போராடவேண்டுமா?’ என செய்தியாளர் ...

Read More »

‘தென்னாபிரிக்க நல்லிணக்க மாதிரியை ஏற்கப்போவதில்லை’ – இம்மானுவேல் அடிகளார்

Imanu

தென்னாபிரிக்க நல்லிணக்க மாதிரியை நாம் ஒரு போதும் ஏற்கபோவதில்லை என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் -வணபிதா எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளார் தெரிவித்தார். அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் வணக்கத்துக்குரிய எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளாரை தமிழ் லீடருக்காக நேர்கண்டிருந்தோம். அதன் போது உலக தமிழர் பேரவையின் நடைமுறை செயற்பாடுகள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், நடைமுறையில் தமிழரின் சர்வதேச அரசியல். என பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். நேர்காணலின் காணொலி வடிவினை முழுமையாக இங்கே பார்வையிடலாம்.

Read More »

அடக்குமுறைக்குள் தமிழ்மக்கள்-ஆஸி.செனட்டர் லீ ரியாணன் நேர்காணல் (காணொலி)

Interview-with-Lee-Rhiannon

தமிழ் மக்கள் தொடர்ந்தும் இராணுவ அடக்குமுறைக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனனர் – அவுஸ்திரேலிய செனட்டர் லீ ரியாணன் கடந்த வருட இறுதியில் இலங்கை சென்று அங்கு அரசால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் நாடுகடத்தப்பட்ட லீ ரியாணன் தமிழ்லீடருக்கு பிரத்தியேக நேர்காணலை வழங்கி இருந்தார். அதன் போது, தமிழ் மக்கள் அங்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகள், இராணுவ பிரசன்னம், தஞ்சம் கோரி வருபவர்களின் உண்மை நிலைப்பாடு, என பலதரப்பட்ட விடயங்களை தமிழ்லீடருடன் பகிர்ந்து கொண்டார். அதன் முழுமையான ஒலி, ஒளி வடிவினை இங்கே பார்வையிடலாம். நேர்காணலை தமிழ் ஆங்கிலம் ...

Read More »

‘தேசியத் தலைவர்’; தடுமாறும் மாவை!? (காணொலி)

maavai1

தமிழ்லீடர் இணையத்துக்கான நேர்காணலின்போது தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் தொடர்பிலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பிலும் கருத்துத் தெரிவிக்க முடியாது கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தடுமாறினார். அவுஸ்திரேலியாவிற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை தமிழ்லீடர் இணையக்குழுமத்தினர் நேர்காணல் ஒன்றிற்க்காக சந்தித்திருந்தனர். அதன் போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றில் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் தொடர்பிலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பிலும் ஆற்றிய உரை தொடர்பில் தலைவர் சம்பந்தன் தெரிவித்த கருத்துத் தொடர்பில் மாவை சேனாதிராஜாவிடம் ...

Read More »

தமிழர்களின் இறையாண்மைக்காகப் போராடுவோம் – சிறிதரன் நேர்காணல்

DSCN3045

மாகாணசபை இனப்பிரச்சினைக்குத் தீர்வாகாது ; தமிழர்களின் இறையாண்மைக்காக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து போராடும் என்று தமிழ்லீடர் இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் சிறிதரன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு வருகைதந்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வட மாகாண சபைத் தேர்தலின் வெற்றிவாய்ப்பு, விக்கினேஸ்வரன் தெரிவு, தமிழர்களின் இறையாண்மை, கூட்டமைப்பின் ஒற்றுமை, தமிழ்த்தேசியமக்கள் முன்னணி போன்றவைகளுடன் இன்னும் பலவிடயங்கள் தொடர்பாக தமிழ்லீடரிடம் மனம் திறந்தார். அவர் தமிழ்லீடர் இணையத்திற்கு வழங்கிய முழுமையான நேர்காணல். ஒளிப்பதிவு: கே.எஸ்.கண்ணன்

Read More »

மகிந்தவின் நீண்டகாலத் திட்டம் சிங்கள பெளத்த ஸ்ரீலங்கா குடியரசு – மனோ செவ்வி

Mano_Ganesan

பதின்மூன்றவாது சட்டத்தில்  இருக்கும் பிரதான அதிகாரங்களை எல்லாம் வெட்டி குறைத்து தமிழர்களுக்கு அதைத் தீர்வாகத் தந்து சர்வதேசத்தை சமாளித்துவிட்டு , இலங்கையை சிங்கள பெளத்த ஸ்ரீலங்கா குடியரசாக மாற்றுவதே அரசாங்கத்தின் நீண்டகாலத் திட்டமாக உள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் திரு. மனோ கணேசன் அவர்கள் தமிழ்லீடருக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார். மகிந்த அரசாங்கத்தின் அராஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு தரப்பினருடனும் இணைந்து  மக்கள் போராட்டங்களை நடத்திவரும் திரு. மனோ கணேசன் அவர்கள் சிங்களப் பேரினவாதிகளின் அக்கினிப் பார்வைக்கு ...

Read More »

தமிழரசுக்கட்சியின் தான்தோன்றித் தனங்கள் – சுரேஷ் நேர்காணல்!

sureshp

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பலமான சக்தியாக ஒரு வலுவான இயக்கமாக செயற்படவேண்டும் என்பதே கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் விருப்பமாக உள்ளது. கூட்டமைப்பு முன்னெடுத்துவரும் பல நடவடிக்கைகள் பலத்த விமர்சனங்களை எதிர்கொண்டுவருகின்ற நிலையில் இது குறித்து தமிழ்லீடர் கேள்வி எழுப்பியது. விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்டதன்பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேவை இன்று அதிகமாக உள்ளதாகக் கூறும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் மக்களுக்கான தீர்வு, மக்களுக்கான உதவி, முன்னாள் போராளிகளின் விடுதலை, நிதிப்பங்கீடு, தமிழ் மக்களின் பலம் உட்பட பல விடயங்கள் ...

Read More »