Author Archives: sigaram

வடக்கு – கிழக்கை நிரந்தரமாக பிரிக்கும் முயற்சி – போராட்டத்துக்கு சத்தியலிங்கமும் அழைப்பு

sathiyalingam

தமிழரின் பாரம்பரிய நிலமாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலத்தொடர்பை நிரந்தரமாக பிரிக்கும் மகாவலி திட்டத்தை எதிர்க்க முல்லை மண்ணில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஜனநாயக ரீதியான மக்கள் எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

Read More »

மட்டக்களப்பில் வரட்சியால் குடிநீருக்கு நெருக்கடி நிலை!

poratheevu

தற்போது நிலவும் வரட்சி நிலமை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகின்றது. இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் பிரதேசத்திலுள்ள குடிநீர் பிரச்சனையுள்ள கிராமங்கள், மற்றும் அரச அலுவலங்கள், ஆலயங்கள், பாடசாலைகள், மரணவீடுகள், பொலிஸ் நிலையங்கள், பொதுமக்களின் விஷேட நிகழ்வுகளுக்கும் தங்குதடையின்றி பிரதேச சபையின் பவுசர் மூலம் நாளாந்தம் குடிநீர் வழங்கிவருவதாக போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் யோகநாதன் ரஜனி தெரிவித்தார்.

Read More »

ஜனாதிபதி வேட்பாளர் யார்? – மஹிந்த பதில்!

mahinda

அர­சாங்­கத்தை எவ்­வாறு வீட்­டுக்கு அனுப்­பு­கின்றோம் என்­ப­தனை வர­வு ­செ­ல­வுத்­திட்டம் மீதான வாக்­கெ­டுப்பில் பாருங்கள். நாங்கள் எங்கு இருக்­கிறோம் என இவர்­க­ளுக்கு தெரியும். அத்­துடன் சரி­யான முறையில் தேர்­தல்­களை அர­சாங்கம்நடத்­த­வேண்டும். இல்­லா­விடில் பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்­து விட்டு பொதுத் தேர்­தலை நடத்­த­வேண்டும் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

Read More »

முல்லைத்தீவு மக்கள் எதிர்கொள்ளவுள்ள பாரிய ஆபத்து?!!

mahavali

முல்லைத்தீவில் கரைத்துறைபற்று பிரதேசசெயலகத்தின் கடமைகளிற்கு சவால் விடுத்து, சிங்கள மக்களை குடியமர்த்தும் முயற்சியை ஆரம்பித்துள்ள மகாவலி அதிகாரசபையின் நடவடிக்கையால் மாவட்டத்திலுள்ள சுமார் 20 ஆயிரம் மக்களின் காணி உரிமங்களின் சட்டபூர்வ தன்மை கேள்விக்கிடமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Read More »

வெலிக்கடைச் சிறைச்சாலையில் போராட்டம் நடத்திய பெண் கைதி மரணம்!

velikadai

வெலிக்­க­டைச் சிறைச்­சா­லை­யில் பெண் கைதி ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார். மார­டைப்பு கார­ண­மாக இந்­தக் கைதி உயி­ரி­ழந்­தி­ருக்­கக்­கூ­டும் என்று சந்­தே­கம் ஏற்­பட்­டுள்­ள­தாக சிறைச்­சா­லை­கள் ஊட­கப் பேச்­சா­ளர் துசார உபுல்­தெ­னிய தெரி­வித்­தார்.

Read More »

சம்பந்தன் பக்கத்திலா பந்து? – நிலாந்தன்

sam

யாழ்ப்பாணத்தில் மிகக்குறைந்தளவு விற்கப்படும் ஒரு பத்திரிகை மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக சர்ச்சைகளை ஏற்படுத்தும் ஒரு பத்திரிகை அச்சர்ச்சைகளின் மூலமாகவே விற்பனைப் பரப்பைக் கூட்டிக்கொள்ளும். ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகை இதுவரை பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அதன் விற்பனை மட்டம் இன்று வரையிலும் லாப இலக்கை எட்டவில்லை. மிக விசித்திரமான ஓர் ஊடகவியல் யதார்த்தம் இது. அப்பத்திரிகையின் ஆசிரியர் வித்தியாதரன் “மின்னல்” என்ற பெயரில் எழுதும் பத்திகளை பெரும்பாலான அரசியல்வாதிகள் அதிகாலையிலேயே வாசித்து விடுகிறார்கள். இப்பத்தியில்தான் கோத்தபாய ஜனாதிபதியாக வருவதை ...

Read More »

மகாவலி அபிவிருத்தித் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் – ஆனந்தன் எம்பி!

ananthan

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் மகாவலி நீரை வழங்குவதற்கான திட்டம் என்ற பெயரில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை கபளீகரம் செய்வதற்கு எதிராக தொடர்ந்து போராடவுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

Read More »

விக்னேஸ்வரனின் அரசியல் எதிர்காலம் குறித்து சிவாஜிலிங்கம் கருத்து!

sivaji

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து விலக வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பில் வடக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Read More »

தீர்வு திட்டத்தை இலங்கை அரசு வழங்க வேண்டியது கட்டாயம் என்கிறார் மனோ!

Mano-Ganesan-01

தமிழர்களுக்கான தீர்வு திட்டத்தை இலங்கை அரசு வழங்க வேண்டியது கட்டாயம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற பண்டாரவன்னியனின் நினைவு தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

Read More »

தமிழ்த் தலைவர்களை ஐக்கியப் பட வலியுறுத்தி கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரம்!

letter

”இது தமிழ்த் தலைவர்கள் எனப்படுவோர் ஐக்கியப்பட வேண்டிய நேரம் ” என்று குறிப்பிட்டு துண்டு அறிக்கைகள் கிளிநொச்சி நகர்ப்பகுதி மற்றும் தர்மபுரம் பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டுள்ளது

Read More »