Author Archives: மயூரன்

மட்டக்களப்பில் இலவச மருத்துவ முகாம்.

10CDC8F1-8D6C-4D86-A37B-AF04A58BF990

மட்டக்களப்பு மாவட்ட வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவிற்குப்பட்ட  திக்கோடைக் கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு  வைத்தியர் சக்திவேல் தர்சனன் அவர்களின் ஏற்பாட்டில்  இலவச மருத்துவ முகாம்  16 ஆம்திகதி  ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. இது திக்கோடை பல்தேவைக் கட்டிட மண்டபத்தில் காலை 9 மணி முதல் 4 மணி வரை இந்த இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது இதில் 300 இற்கு மேற்பட்ட நோயாளிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்த மருத்துவமுகாம் மருத்துவப்பிரதிநிதி நண்பர்களின் பங்களிப்புடனும் களுவாஞ்சிக்குடி செல்வா பாமசியின் அனுசரணையுடனும் நடாத்தப்பட்டதுடன் இதற்கு பல வழிகளிலும் உதவிய ...

Read More »

மட்டு மாநகரசபை உறுப்பினர் ஜெயந்திரகுமார் மீது தாக்குதல் முயற்ச்சி.

AACA1B70-6EED-46B4-919C-A4471D9D387A

மட்டக்களப்பு மாநகர சபையின் திருச்செந்தூர் 12 ஆம் வட்டார உறுப்பினரான சீனித்தம்பி ஜெயந்திரகுமார் மீது நேற்று (09) பி.ப 6.50 மணியளவில்  கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதுடன் கொலைமிரட்டல் விடுத்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். அங்கு வந்த  15 பேர் கொண்ட கும்பல் பொல்லு மற்றும் தடிகளுடன் குறித்த உறுப்பினரைத் தாக்குவதற்கு அவரது வீட்டிற்கு வந்தனர் அப்போது  அவர் வீட்டில் இல்லாததால் அவரது வீட்டில் இருந்த அவரது ஆதரவாளர் பூபாலபிள்ளை இந்திரன் என்பவரின் தலையில் பலமாக தாக்கியுள்ளனர் அவர்  இப்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ...

Read More »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எப்போது தலைவரானார் சுமந்திரன்?

49D96564-4089-4CA4-844A-03AD0AC6DE43

வடமாகாணசபை முதலமைச்சரும், நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் சிலோன்  ருடே பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் நான் என்னுடைய காலத்திற்குள் பல தடைகள் வந்த போதும் மக்களின்  ஆதரவுடன் தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டிய விடயங்களை  என்னால் முடிந்தவரையில் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சேவை செய்வதே எனது கடப்பாடாகக் கருதி செய்துள்ளேன்  என்று குறிப்பிட்டார்.  சிலோன் ருடே பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி தமிழில் : 1. கேள்வி – உங்கள் முதலமைச்சர் பதவிக்காலம் விரைவில் முடிவடையவிருக்கின்றது. முதலமைச்சர் என்ற வகையில் இது வரையான உங்கள் ...

Read More »

 இலங்கையில் பௌத்தத்துக்கே முன்னுரிமை- நல்லாட்சி  அரசு.

6C3E23EC-8948-41D4-88CB-9BDAA3A286C1

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று தினம் (07) உரையாற்றிய உதய கம்மன்பில, புதிய அரசியலமைப்பு வரைவில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமையையும் முதன்மை இடத்தையும் அரசாங்கம் நீக்கவுள்ளதாக குற்றம்சாட்டினார். இதற்குப் பதிலளித்த அவைத் தலைவரும் அமைச்சருமான, லக்ஸ்மன் கிரியெல்ல புதிய அரசியலமைப்பிலும், தற்போதைய அரசியலமைப்பில் உள்ளது போன்று பௌத்த மதத்துக்கு முன்னுரிமையும் அதனைப் பாதுகாப்பதற்கா அரசின் கடப்பாடும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று கருத்து தெரிவித்தார்.  தொடர்ந்து பேசுகையில் பௌத்த மதத்தினை  பாதுகாப்பதற்கு தற்போதுள்ள அரசியலமைப்பின் விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது. பெளத்த மதமே தொடர்ந்தும் இலங்கையின் முதன்மையான மதமாக இருக்கும். ...

Read More »

புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்.

batti3

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதே சபைக்கு உட்பட்ட பெரியபுல்லுமலை பிரதேசத்தில்  தண்ணீர் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டம் முழுவதிலும் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. தண்ணீர் பற்றாக்குறையினால் அவதியுறும் புல்லுமலை பிரதேசத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சி பாலைவனமாக்கும் நோக்குடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் மேற்படி தண்ணீர் தொழிற்சாலையின் கட்டுமாணப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டியும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசாங்கம் செயற்பட வேண்டியும் மட்டக்களப்பு மாவட்டம் பூராக பூரண ஹர்த்தாலுக்கு பொது அமைப்புக்கள் அழைப்பு விடுத்தன. பொது அமைப்புக்களின் கோரிக்கைகளுக்கு இணங்கி ...

Read More »

தமிழ் குடும்பம் முஸ்லிமாக மாற மறுத்ததினால் தீவைப்பு!

4BFC695C-27B8-4219-9A82-0E5CA3503F73

அம்பாறை மாவட்டத்தின் வலத்தாப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்மையில் புரம் எனும் கிராமம் சுனாமிக்கு பின்னர் உருவாகிய கிராமம் என்பதுடன் அது தற்போது ஸ்மையில் புரம் என்ற பெயருடன் முழு முஸ்லிம் கிராமமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு ஒரு சில தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிப்பதாக இருந்தால் நீங்களும் முஸ்லீமாக இருக்க வேண்டும் என்று அங்குள்ள இஸ்லாமிய மதவாதிகள் தமிழ் குடும்பங்களை அச்சுறுத்தி வந்த நிலையில் பல தடவைகள் சில குடும்பத்தினர்களுக்கு இடையில் கைகலப்பு நடைபெற்று பொலீசில் முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வேளையில் இங்கு வசித்து ...

Read More »

தேர்தல் காய்ச்சல்: மக்களை சந்தித்த தமிழ் அரசு கட்சி!

F9DA00E1-F247-467D-AD19-3BE8A547B2C7

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகளின் மக்கள் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வு சித்தாண்டி ஈரளக்குளம் கிராம அதிகாரி பிரிவில் செங்கலடி பிரதேச சபையின் சித்தாண்டி வட்டார உறுப்பினர் எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக ஞா.ஸ்ரீநேசன், சீனித்தம்பி யோகேஸ்வரன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் உட்பட கட்சியின் பிரநிதிகளும் கலந்து கொண்டனர். அத்துடன் ஈரளக்குளம், இலுக்கு, கூழாவடி ஆகிய கிராமங்களின் நடாத்தப்பட்ட மக்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டு மக்கள் ...

Read More »

எமக்கு உயிர் வாழ தண்ணீர் இல்லை உமக்கு வியாபாரத்திற்கு வேண்டுமா!

D8C15580-3E54-484B-9D40-FEDDA68CE472

மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேசத்துக்குட்பட்ட பெரியபுல்லுமலையில் மக்களின் எதிர்ப்பினையும் மீறி அமைக்கப்படுகின்ற போத்தலில் அடைக்கப்படும் குடிநீர்த் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதனை தடுக்கக் கோரியும் செப்டம்பர் 7ம் திகதி கடை அடைப்பிற்கு தயார் ஆகவேண்டும், என “முற்போக்கு தமிழர் அமைப்பு” வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்  இது ஒரு குறித்த சமூகத்திற்கான போராட்டம் இல்லை இது ஒட்டுமொத்த சமூகத்திற்கான போராட்டம் சகல பேதங்களுக்காப்பால் ஒன்று சேர்வோம். எனவும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்  சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் கூறியிருக்கிறார். போத்தலில் அடைக்கப்படும் குடிநீர் தொழிற்சாலை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை ...

Read More »

திருமலையில்  திறக்கப்பட்ட ஏற்றம் அறக்கட்டளையின் கைத்தொழில் நிலையம் !

IMG-1616

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட சந்தோசபுரம் கிராமத்தில் ஏற்றம் நிறுவனத்தினரால் கைத்தொழில் நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.  ஏற்றம் அவுஸ்திரேலியாவின் நிதிப் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இக் கைத்தொழில் நிலையத்தில் தற்போது ஊதுபத்திகள் தயாரிக்கப்படுகின்றன. ஏற்றத்தின் நிறுவனப் பணிப்பாளர் இராசரத்தினம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஒழுங்கமைப்பை ஏற்றம் அறக்கட்டளையின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர்  டிசான் அவர்கள் செய்திருந்தார். ஏற்றம் அறக்கட்டளையின் கிளிநொச்சி இணைப்பாளர் மதிவாணன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.   இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதேச செயலாளர் அவர்கள் ஏற்றம் நிறுவனத்தின் இம்முயற்சியைப் பாராட்டியதோடு  ஊதுபத்தியுடன் ஏற்கனவே ...

Read More »