Author Archives: மாயவன்

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பொது பட்டமளிப்பு

image_d1734635fe

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பொது பட்டமளிப்பு வந்தாறுமூலையிலுள்ள நல்லையா மண்டபத்தில் நேற்று நான்கு அமர்வுகளாக சிறப்பாக நடைபெற்றது கிழக்குப் பல்கலைக் கழக வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா தலைமையில் நடைபெற்ற விழாவில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து உப உவேந்தர் கலாநிதி த.ஜெயசிங்கம், வளாகங்களின் முதல்வர்கள், பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மெய்யியல் விஞ்ஞானம், மெய்யியல் கலை, கல்வி, வணிக முகாமைத்துவம், பொருளாதார அபிவிருத்தி, ஆகிய துறைகளில் முதுமானி, பட்ட மேற்படிப்பு டிப்ளோமா, சௌக்கிய பராமரிப்பு ...

Read More »

ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்காத அதிகாரிகள் நாட்டுக்கு திருப்பி அழைப்பு

11e3503953b20ae128c8d4156f5a0884_L

தன்னுடைய தொலைபேசி அழைப்புக்கு பல சந்தர்ப்பங்களில் பதிலளிக்க தவறிய ஒஸ்ட்ரியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரியானி விஜேசேகர உள்ளிட்ட ஐவரை மீண்டும் இலங்கைக்கு அழைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒஸ்ட்ரியாவுக்கான இலங்கைத் தூதுவர் அலுவலகத்திற்கு பல முறை தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில், அதற்கு எந்தவொரு அதிகாரியும் பதிலளிக்க வில்லை. இதனையடுத்து, குறித்த தூதுவராலயத்தின் தூதுவர் உள்ளிட்ட 5 அதிகாரிகள் மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

புகையிரதத்துடன் கார் மோதியதில் நால்வர் பலி – இருவர் காயம்

unnamed-26-780x405

ஓமந்தை பன்றிக்கெய்த குளம்  பகுதியில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக் கிழமை புகையிரதம் பயணிக்கும் போது பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஒன்றில்  கடக்க முற்பட்ட போதே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றார்.

Read More »

கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்

download

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக டி சில்வா தெரிவித்திருப்பதாக கூறப்படும் கருத்து தொடர்பில் விசாரணை ஆரம்பித்திருப்பதை காண முடியவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். பாதுகாப்பு தரப்பினர் உடனடியாக இது தொடர்பில் விசாரணையை ஆரம்பித்து உண்மைய நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அநுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில் கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் ...

Read More »

தனி ஈழம் பெறலாம் என்ற ஒரு மாயையை ஒரு பகுதியினர் ஏற்படுத்துகிறார்கள்.;இமானுவேல் ஆனோல்ட்

1-197

போருக்கான சூழ்நிலையை உருவாக்கி மீண்டும் தனி ஈழம் பெறலாம் என்ற ஒரு மாயையை ஒரு பகுதியினர் ஏற்படுத்துகிறார்கள். அது மக்களை மீண்டும் நிரந்தர அழிவிற்குள் தள்ளிவிடும். என  யாழ்.நகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் அழிவுற்ற யாழ்ப்பாண நகரை மீண்டும் தூய்மையான, நகராக உருவாக்க உறுதி பூண்டுள்ளேன் என  அவர் மேலும் தெரிவித்துள்ளார். கனடாவிற்கு விஜயம் செய்துள்ள அவர், அங்கு இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ...

Read More »

விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்- நிலாந்தன்

625.500.560.350.160.300.053.800.900.160.90-2-26

யுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருந்தவருமாகிய ஒரு மூத்த சிவில் அதிகாரி என்னிடம் பின்வருமாறு கேட்டார். “முதலமைச்சர் விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் எழுந்து நிற்க வைத்ததை ஒரு தரப்பினரும் சில ஊடகங்களும் ரசிப்பது போல தெரிகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமன்தான். ஒரு முன்னாள் நீதியரசராக இருந்தாலும் அவர் நீதிமன்ற ஒழுங்கிற்கு உட்பட்டவர்தான். ஆனால் அவர் ஒரு முன்னாள் நீதியமைச்சர் மட்டுமல்ல ஒரு முதலமைச்சரும் கூட. இப்போதுள்ள தமிழ் தலைவர்களில் அவர் ...

Read More »

ஆட்சித் திறன் – – அரசியல் மாண்பு கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்- கருணாகரன்

k2

கிளிநொச்சி ஊடகவியலாளர்கள் தொடர்பாக அவர்கள் பணியாற்றுகின்ற ஊடகங்களின் பிரதம ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதப் போவதாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ. வேழமாலிகிதன் தெரிவித்திருக்கிறார். சபையைப் பற்றி சில ஊடகவியலாளர்கள் கடுமையாக விமர்சிப்பதால் சபையைத் திறம்பட இயக்குவதற்குச் சிரமமாக உள்ளது எனவும் இதனைத் தாம் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார் அவர். கடந்த 10.-8.2018 திங்கட்கிழமை கரைச்சிப்பிரதேச சபையின் ஏழாவது அமர்வின்போது தவிசாளர் விடுத்த அறிவிப்பு இது. சபை நடவடிக்கைகள் பாதிக்கப்படுமளவுக்கு “ஊடகவியலாளர்கள்” யாரேனும் தவறான செய்திகளையும் கட்டுரைகளையும் அறிக்கையிட்டிருந்தால், அல்லது ஏதாவது உள்நோக்கத்துடன் அவர்கள் செயற்பட்டிருந்தால் அவற்றைத் தகுந்த ...

Read More »

மத்திய அரசு மனம் வைத்தால் மட்டுமே ஏழுபேருக்கும் விடுதலை

raa_13092018_SPP_GRY

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் 27 ஆண்டுகளாக இருக்கும் 7 பேரையும் விடுவிக்கும் நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் கூறி இருந்தது. அதன்படி, தமிழக அமைச்சரவை கூடி, ‘பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்’ என்று தீர்மானம் எடுத்தது. இதுகுறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும். இந்நிலையில், அந்த 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்றால் மத்திய அரசின் அனுமதி வேண்டும் என்று சில அதிகாரிகள் ...

Read More »

டெனிஸ்வரனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்க வடக்கு முதல்வர் இணக்கம்

1536974588

வடமாகாண முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியில் மீண்டும் உள்வாங்குவதற்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இணக்கம் தெரிவித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வடக்கு மாகாண சபையின் 131 ஆவது அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை(11) நடைபெற்றிருந்த நிலையில் அன்றிலிருந்து வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்றும் நேற்று முன்தினமும் இந்த விவகாரம் தொடர்பில் வடக்கு மாகாண அவைத்தலைவர் வடக்கு மாகாண முதலமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். ...

Read More »

திருகோணமலையில் நிலநடுக்கம்; கிண்ணியா, மூதூரில் உணர்வு

Earthquake-Trincomalee

திருகோணமலை, களப்பை அண்டிய பகுதியில் இன்று (15) நள்ளிரவு சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இன்று (15) நள்ளிரவு 12.40 மணியளவில் ஏற்பட்டதாகவும் சிறியளவான ஒரு அதிர்வு எனவும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் கே. சுகுனதாஸ் தெரிவித்தார். இது விடயமாக தொடர்பு கொண்டு கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவித்த அவர். இவ் அதிர்வானது கிண்ணியா, மூதூர், திருகோணமலை ,லங்கா பட்டிணம், வெருகல் பகுதிகளிலேயே இடம் பெற்றுள்ளது.  3.58 ரிச்டர் அளவில் இந்நிலஅதிர்வு பதிவாகியதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து, திருகோணமலை ...

Read More »