Author Archives: மாயவன்

பௌத்த தொல்பொருள் சின்னங்களை அழித்து இன முரண்பாடுகளை தோற்றுவிக்கிறது வடமாகாண சபை – தினேஷ் குணவர்தன

dinesh-gunawardena-860-05-720x450

பௌத்த தொல்பொருள் சின்னங்களையும் புராதான பிரதேசங்களையும் அழிக்கும் வகையிலும் வடமாகாணசபை செயற்பட்டு வருகின்றது எனவும் சிங்கள பௌத்த தொல்பொருள் சின்னங்களை அழித்து இன முரண்பாடுகளை ஏற்படுத்தும் திட்டமிட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றது என பொது எதிரணி உறுப்பினர் தினேஷ் குணவர்தன குற்றம் சுமத்தினார். எனினும் வடக்கில் பௌத்த தொல்பொருள் சின்னங்களை அழிக்கும் எந்த நடவடிக்கைளும் இடம்பெறவில்லை எனவும் சிங்கள பகுதியிலேயே அதிகளவான பௌத்த தொல்பொருள் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிறேரோ சபையில் அறிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை  27/2  இல் ...

Read More »

மஹிந்தவின் குடும்பத்தினரை தவிர வேறொருவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியாதா – ரஞ்சித் கேள்வி

image_1518726910-edb76742e6

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் அல்லது  கட்சியின் உறுப்பினர் களமிறக்கப்படலாம் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில்  கட்சிக்குள் தற்போது எவ்விதமான  கருத்து வேறுப்பாடுகளும் காணப்படவில்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். பொது எதிரணியினர் யாரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவார்கள் என்பதே தற்போது பேசுபொருளாக காணப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்களை தவிர  அக்கட்சியின்  பிறிதொரு உறுப்பினர்  ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியாதா என தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின்  தலைமையகமான சிறிகொதாவில் ...

Read More »

அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதாக வாக்குறுதியளித்த நல்லாட்சி தொடர்ந்தும் ஏமாற்றுகின்றது

IMG_4825

2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வடக்கிற்கு சென்று அரசியல் கைதிகளை விடுவிப்பதாக பொய் வாக்குறுதி அளித்து அம் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக்கொண்ட அரசாங்கம், நாட்டில் காணப்படும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க மறுப்பதைப் போன்றே இந்த பிரச்சினைக்கும் தீர்வினை வழங்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றது. அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல்கைதிகளின் போராட்டம் 7 நாட்களை கடந்துள்ள நிலையில் அரசாங்கத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது கண்டனத்துக்குரியதாகும். இவ்வாறு மௌனம் காப்பதன் மூலம் அரசாங்கம் இந்த விடயத்தை மூடி மறைக்க முயற்சிக்கின்றது. அவ்வாறு ...

Read More »

தமிழ்க் கட்சிகள் இணங்கியிருந்தால் இலங்கை புதிய வரலாற்றில் பயணித்திருக்கும் – பிரதமர்

19db36169de0d

மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக் குழு இனப்பிரச்சினைத் தீர்வுகள் குறித்து  முன்வைத்த யோசனைகளுக்கு  அன்று தமிழ்க் கட்சிகள் இணங்கியிருந்தால் நாடு புதியதொரு வரலாற்றில் பயணித்திருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த ஆட்சியில் மீண்டும் தீர்வுகள் குறித்த நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றோம். இதில் சகலரதும் இணக்கப்பாடு ஏற்படும் நிலையில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி தீர்வுக்காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள முனசிங்க தொடர்பான அனுதாபப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு ...

Read More »

சமந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன் – ஆனந்தசங்கரி

42224011_329706357589830_8281057827020079104_n

தமிழத்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  இரா. சம்மந்தன் தனது எதிர்க் கட்சி தலைவர் பதவியை ஒரு நாள்  எனக்கு தந்தால் அதன்  அப்பதவியின் பெறுமதியை உணர்த்துவேன்.அப்பதவி மூலம் என்னவெல்லாம் செய்யலாம் என்பதனை காட்வேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இன்று 20-09-2018 கிளிநொச்சியில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் சம்பந்தன் பதவியை துறந்து ஒருநாள் பதவியை தந்து பார்க்கட்டும் அவரது பதவியிலிருந்து எவ்வாறானவற்றை சாதிக்கலாம் என காட்டுகிறேன். அரசியல் கைதிகள் ...

Read More »

பொலிஸ் மா அதிபர் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணை

f137dcece48070a913d9f960d76f0319_XL

ஜனாதிபதியோ, பிரதமரோ பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவி விலகுமாறு பணிப்புரை வழங்கவில்லை என்று சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார கூறினார். இன்றைய தினம் பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் கனகஹேரத்தால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். எவ்வாறாயினும் பொலிஸ் மா அதிபருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணை மேற்கொள்ளுமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர், அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதி அமைச்சர் நளின் பண்டார கூறினார். ...

Read More »

பொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறு கூறவில்லை

19db36169de0d

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவி விலகுமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தல்  எதனையும் விடுக்கவில்லையென, பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் பொலிஸ்மா அதிபரை பதவி  விலகுமாறுக் கோரி, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அறிவித்தல் விடுத்திருந்ததாக ஊடகங்களில்  செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை தொடர்பிலேயே, பிரதமர் அலுவலகம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

Read More »

ஆவாவை 2 நாள்களுக்குள் அடக்குவோம்

download

ஆவா குழுவை, இன்னும் இரண்டு நாள்களுக்குள் அடக்குவோமென, யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். அத்துடன், நாட்டின் சட்டம், ஒழுங்கு என்பவற்றை மதித்தே பொறுமையாக இருக்கின்றோமெனவும் அவர் குறிப்பிட்டார். பலாலி இராணுவ தலைமையகத்தில், இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More »

இலங்கையிலிருந்து 100 தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் தமிழ்நாட்டிற்கு

Radakrishnan

இந்தியாவின் தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கும் இலங்கையின் இராஜாங்க கல்வி அமைச்சுக்கும் இடையில், விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கையிலிருந்து 100 ​தமிழ் மொழி மூல ஆசிரியர்களை,  ஆசிரியர் பயிற்சி நெறிகளைப் பெற்றுகொள்வதற்காக இந்தியாவுக்கு அனுப்பவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

Read More »

இந்து – லங்கா திட்டத்தை மஹிந்த தலைமையில் எதிர்காலத்தில் முன்னெடுக்க முடியும் – ரமேஷ் பத்திரண

mahinda-e1453091048596

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு அந்நாட்டுடன் மீண்டும் நட்புறவை ஏற்படுத்தியுள்ளார். எனவே இந்து லங்கா திட்டத்தை எதிர்காலத்திலும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலேயே முன்னெடுக்க முடியும் என்பது அவ்விஜயத்தின் மூலம் உறுதியாகியுள்ளது. மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோர்களை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியமை தொடர்பான விசாரணை நடவடிக்கைகளிலிருந்து பொலிஸ் மா அதிபரை நீக்க வேண்டும். அப்போதுதான் உரிய விசாரணைகளை முன்னெடுக்க இயலும் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற ...

Read More »