Author Archives: மாயவன்

இடைக்கால அறிக்கை குறித்து ஆராய விஜயதாஸ தலைமையில் விசேட குழு

rajapakesha-720x450

காணாமல்போனோர் குறித்து ஆராயும் அலுவலகம் முன்வைத்துள்ள இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய்ந்து தகுதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் யோசனை முன்வைக்க அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை உபகுழுவில் மேலும் 10 அமைச்சர்கள்   நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைக்கும் யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது. காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் அலுவலகம் கடந்த இடைக்கால அறிக்கையை கடந்த மாதம் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது. இதில்   சட்ட ஏற்பாடுகள்  இழப்பீடுகள் காணாமல்போதல்கள்  எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள்   தொடர்பாக பல்வேறு பரிந்துரைகள்  ...

Read More »

அமைச்சர் ஹிஸ்புல்லாவும் மகனும் அதிரடியாக கைது

hisbulla

இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும் இன்று காலை வாழைச்சேனைப் பொலிசார் கைது செய்துள்ளனர் சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட நிறுவனத்தின் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் பொருட்களைக் கடத்தியதுடன் அந்தப் பொருட்கள் குறித்து நம்பிக்கையற்ற தகவல்களை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்த பொலிஸ்மா அதிபரூடாக கடந்த ஜனவரி மாதம் குற்ற ...

Read More »

விக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல் – புருஜோத்தமன் தங்கமயில்

sumanthiran-vigneswaran

தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய கட்டம், ‘விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’ என்கிற அளவில் சுருங்கி நிற்கிறது. அவர்களின் நாளாந்த நடவடிக்கைகள், உரைகள், அறிக்கைகள் சார்ந்துதான் அரசியல் இயக்கமும், ஊடக இயக்கமும் நிகழ்ந்து வருகின்றன. தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்கால நம்பிக்கைகளாக, ஆக்கபூர்வமான சக்திகளாகத் தம்மைக் கருதும் தரப்புகளும் கூட, இருவரில் ஒருவரின் துணைக்குழுவாக மாத்திரமே தற்போது இயங்கி வருகின்றன. சுய அடையாளத்தோடு எழுந்து வருவது சார்ந்தோ, நம்பிக்கைகளை ஏற்படுத்துவது சார்ந்தோ, எந்தவொரு தரப்பும் கடந்த பத்து வருடங்களில் வெற்றி பெற்றிருக்கவில்லை. இந்த நிலையில் நின்றுகொண்டுதான், ...

Read More »

தமிழ்நாடு மாநில அரசாங்கத்தினால் யாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்கள்

38cf13d1792d6fdfbb9cd8578526c3a1_XL

யாழ். நூலகத்திற்கு தமிழ்நாடு அரசாங்கத்தினால் 50 ஆயிரம் புத்தகங்களை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றள்ளது. யாழ். நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று(18) இடம்பெற்ற நிகழ்வில் தமிழகத்தின் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நூல்களை கையளித்தார். இதன்போது தெரிவுசெய்யப்பட்ட வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்படும் காசோலை கையளிக்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது. கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷணனின் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

Read More »

விக்னேஸ்வரனின் ஆட்சேபனைகளை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

625.500.560.350.160.300.053.800.900.160.90-2-26

நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பி.​ டெனிஸ்வரனால் தொடுக்கப்பட்டுள்ள மனு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. வடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பி.​டெனிஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்க கடந்த ஆண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார். இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு ...

Read More »

விஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை : சபாநாயகர் சபையில் தகவல்

karu

பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக சட்டமா அதிபர் வழக்கு தொடர நடவடிக்கையெடுத்துள்ளதாக  சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் பொது எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார். விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்து தொடர்பாக சட்ட மா அதிபரின் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாக சபாயாகரான நீங்கள் இந்த சபைக்கு அறிவித்திருந்தீர்கள். அதன்படி சட்ட மா அதிபரினால் அது தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டதா? அது வழங்கப்பட்டிருந்தால் ...

Read More »

11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: சர்வதேசத்திடம் மனு கையளிப்பு

missing-720x450

இலங்கை இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்களின் குடும்ப ஒன்றியத்தினர் இன்று சர்வதேசத்திடம் தங்கள் கோரிக்கை மனுக்களை கையளித்துள்ளனர். கனேடிய தூதரகம், அமெரிக்க தூதரகம், ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம், பிரித்தானிய தூதரகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியக் காரியாலயம் ஆகிய இடங்களுக்கு சென்று அங்கு சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் தங்களது மனுக்களை கையளித்துள்ளனர். தொடர்ந்து கடந்த ஆட்சிக் காலத்தில் அரங்கேறியிருந்த இந்த கடத்தல் சம்பவத்தை கண்டித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். அதனை தொடர்ந்து சுவிஸ் ...

Read More »

3 மாதங்களுக்குள் பலாலி விமான நிலைய அபிவிருத்தி -இந்தியா

palaly-ariport-660x330

இலங்கையின் பலாலி விமான நிலையத்தை, பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக இந்தியாவின் விமான நிலைய அதிகார சபை, அறிவித்துள்ளது இதுதொடர்பாக இந்திய விமான நிலைய அதிகார சபைக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் உடன்பாடு ஒன்று அண்மையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மற்றும் அனைத்து காரணிகளையும் உள்ளடக்கியதாக இந்த விரிவான அறிக்கை தயாரிக்கப்படும் என்றும், 3 மாதங்களுக்குள் இந்த அறிக்கையைத் தயாரிக்கும் பணி நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும், இந்திய விமான நிலைய அதிகார சபை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய விமான நிலைய அதிகாரசபை வெளியிட்டுள்ள ...

Read More »

சீன கடன் மற்றும் நிதியுதவியில் இடம்பெறும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு

021

சீன கடன் மற்றும் நிதியுதவியின் கீழ் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்றத்தினை மீளாய்வு செய்தல் மற்றும் அச்செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த அபிவிருத்தி செயற்திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்து இதன்போது விரிவாக மீளாய்வு செய்யப்பட்டதுடன், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மக்களின் நலனுக்காக நடைமுறைப்படுத்தப்படும் இந்த அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள ...

Read More »

சுமந்திரன் கொலைச் சந்தேக நபர்களின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு

Sumanthiran

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படும், உறுப்பினர்கள் மூவரின் கோரிக்கை, ​கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று (18) நிராகரிக்கப்பட்டது. தங்களுக்கு எதிரான வழக்கை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றாவிடின், தாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக, அந்த உறுப்பினர்கள் மூவரும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்னவின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். எனினும், சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான அதிகாரம் தனக்கில்லையெனத் தெரிவித்த நீதிபதி, அந்த வழக்கை, அத்தருணத்திலேயே விசாரணைக்கு எடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ...

Read More »