Author Archives: மாயவன்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை மீது விசனம்

Michelle-Bachelet UN

நிலைமாறும்கட்ட நீதி தொடர்பான நிகழ்ச்சிநிரலை இலங்கையில், அதிகாரிகள் அர்த்தபூர்வமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மிக மெதுவான நகர்வையே முன்னெடுக்கின்றனர் எனத்தெரிவித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி மைக்கேல் பசேல் ஜெரியா, இலங்கை தொடர்பிலான சில விடயங்கள் குறித்து, தன்னுடைய கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடர், நேற்று (10) ஆரம்பமானது. அத்தொடர், எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறும். இந்தக் கூட்டத்தொடரில், நியாயமற்ற வகையில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் பற்றி ஆராயும் ஐ.நா பணிக்குழுவின் இலங்கை விஜயம் பற்றிய ...

Read More »

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை

ranil-1

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்குக் குத்தகைக்கு வழங்கியன் மூலம் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். வியட்நாமின் ஹெனொய் நகரில் இடம்பெறும் ´ஆசியான்´ உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள பிரதமர், சர்வதேச ஊடகவியலாளர் ஒருவருடனான நேர்காணலில் இதனைக் கூறியுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் சம்பந்தமாக சீனாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை 70 ஆண்டுகள் செல்லுபடியாகின்ற போதிலும் தேவையேற்படின் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை இரத்து செய்து கொள்ள முடியும் என்று பிரதமர் கூறியுள்ளார். அதேநேரம் இந்தியாவுக்கு அழுத்தம் ஏற்படும் எந்தவொரு செயற்பாட்டையும் ...

Read More »

கிளிநொச்சி மாவட்டத்திற்கு தீயணைப்பு பிரிவு உருவாக்கம்

IMG_4563

மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சின் 97 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சிக்கான தீயணைப்பு பிரிவு இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இன்று( மாலை மூன்று  மணியளவில் கிளிநொச்சி கரடிபோக்குச் சந்திக்கருக்கில் அமைக்கப்பட்ட   மாவட்ட தீயணைப்பு பிரிவின் அலுவலகமும் தீயணைப்புக்குரிய வாகனங்கள் உள்ளிட்டவை உத்தியோகபூர்வமாக கரைச்சி பிரதேச  சபையிடம் கையளிக்கப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ காரணமாக சந்ததையின் பெரும் பகுதி தீயினால் எரிந்து பல இலட்சங்கள் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்திருந்தன. இதனை தொடர்ந்து  கிளிநொச்சி ...

Read More »

வடக்கில் கண்ணிவெடி அகற்றலுக்கு ஜப்பான் 1.25 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

unnamed-1-720x450

நாட்டின் வட பகுதியில் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான அடிப்படையிலான பணிக்கு உதவும் வகையில் ஜப்பான் அரசாங்கம் 1.25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியினை வழங்கியுள்ளது. கண்ணிவெடி அகற்றல் தொடர்பில் சர்வதேச ரீதியில் செயற்பட்டுவரும் கண்ணிவெடிகள் ஆலோசனைக்குழு மற்றும் உள்நாட்டில் செயற்படும் ஸ்கவிடா மனிதாபிமான உதவிகள் மற்றும் கண்ணிவெடிகள் ஆலோசனைக்குழு ஆகிய அமைப்புக்களுக்கு கண்ணிவெடி அகற்றுவதற்கென மேற்படி நிதியினை ஜப்பான் அரசாங்கம் வழங்குகின்றது. கண்ணிவெடி அகற்றுவதற்கான நிதியுதவியினை வழங்குவதற்கான இருதரப்பு ஒப்பந்தம் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கெனிசி சுகுமாவுடன், ஸ்கவிடா மனிதாபிமான உதவிகள் மற்றும் கண்ணிவெடிகள் ...

Read More »

இந்துக் கோவில்களில் மிருகபலி செய்வதை தடை செய்ய அமைச்சரவை அனுமதி

500px-கடாவெட்டு

இந்துக் கோவில்களில் அல்லது அதன் எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் மிருகபலி மற்றும் பறவைகள் பலியிடுவதை தடைசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா கூறியுள்ளார். மிருக பலி சம்பந்தமாக சட்ட ஒழுங்கமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன் முன்வைத்த யோசனைக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுடன், அது தொடர்பான சட்ட வரைவை இயற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்து மதத்தின் ...

Read More »

ராஜீவ் கொலை ; 7 பேரின் விடுதலையை இந்தியா தீர்மானிக்கட்டும் – டெல்லியில் மஹிந்த தெரிவிப்பு

mahinda

இந்நிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் ஏழு பேரின் விடுதலை தொடர்பில் இந்நிய மத்திய அரசு மற்றும் நீதி துறையே தீர்மானிக்க வேண்டும். இதுவொரு சட்ட விடயம் ஆகவே  இவ்விடயத்தில் எவ்வித தனிப்பட்ட கருத்துக்களையும்  குறிப்பிட முடியாது என  முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்நிய ஊடகங்களுக்கு தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சியின்  மூத்த உறுப்பினரான   சுப்ரமணியன் சுவாமி  தலைமையிலான  விராட் இந்துஸ்தான் நிகழ்ச்சியில்  கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகபூர்வ  விஜயத்தை ...

Read More »

வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயத்துறையில் அதிகளவான பிரச்சினைகள் – பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன்

IMG_4554

வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயத்துறையில் அதிகளவான பிரச்சினைகள் – பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயத்துறையில் அதிகளவான பிரச்சினைகள் காணப்படுகின்றன.  இதனால்தான் அரசு எனக்கு இப் பதவியை தந்துள்ளனர் என பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்று (11-09-2018) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற  மாவட்ட விவசாயக் குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ஒரு காலத்தில் விவசாய உற்பத்தியில் முன்னிலை வகித்த வடக்கு மாகாணம் இன்று ஆக கடைசி ...

Read More »

நிதியமைச்சுக்கு சொந்தமான வாகனத்தில் விசம்கலந்த பால் பக்கெட்டுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன : மஹிந்த

mahindablamarjunafamily

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விசம் கலந்த அந்த பால் பக்கெட்டுக்கள் எங்கிருந்து வந்தன, எப்படி பகிர்ந்தளிக்கப்பட்டன, எந்த வாகனத்தில் கொண்டுவரப்பட்டன என்பது தொடர்பிலான தகவல்கள் தற்போது எம் அனைவருக்கும் தெரியவந்துள்ளன என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்த பால் பக்கெட்டுகள் நிதியமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்றிலேயே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார். கடந்த கால ஊழல் மோசடி குறித்த விசாரணைகளுக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றில் இன்று (திங்கட்கிழமை) கோத்தபாய உள்ளிட்ட ஏழு பேர் ஆஜராகியிருந்தார். அதேநேரம், இந்த வழக்கு விசாரணையின்போது முன்னாள் ...

Read More »

அரசாங்கத்திற்கு எதிராக வேலை நிறுத்தப்பேராட்டம் : வடக்கில் உள்ளவர்களும் ஆதரவளிப்பர்

Vasudeva_Nanayakkara

அரசாங்கத்திற்கு எதிராக எமது அடுத்த கட்ட நடவடிக்கையாக இருப்பது நாடுபூராகவும் மக்கள் போராட்டத்துடன் வேலை நிறுத்தப்போாராட்டத்தை மேற்கொள்வதாகும். அதற்கான ஒத்திகையாவே கொழும்புக்கான மக்கள் போராட்டம் இருந்தது. இந்த போராட்டத்துக்கு  வடக்கிழக்கில் இருக்கும் பெரும்பாலானவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்  என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் இருப்புக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டார். சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே ...

Read More »

20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – ஜீ.எல்.பீரிஸ்

GL

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு பெற்றால் மாத்திரம் போதாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி மக்கள் ஆதரவையும் பெறவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் சட்டத்துறை பேராசிரியருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமை குறித்து விரைவில் உயர்நீதிமன்றில் மனித உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு ...

Read More »