Author Archives: இனியன்

அமெரிக்கா, ஜப்பானிடம் இருந்து இலங்கைக்கு போர் கப்பல்கள்!

VardMarine_od

இலங்கைக் கடற்படைக்கு அமெரிக்கா, ஜப்பானிடம் இருந்து கப்பல்கள் பெறப்படவுள்ளன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இந்த விடயம் குறித்து அமெரிக்காவிடம் இலங்கை உத்தியோகபூர்வமாக பேசவுள்ளது. ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்க இரண்டு கப்பல்களை வழங்குவதாக இந்த வாரம் உறுதியளித்திருந்தார் எனவும் அவர் கூறினார்.

Read More »

புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணத்தில் மகிழ்ச்சி இல்லை! ராகுல் காந்தி

Gandhi

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதில் தனக்கு மகிழ்ச்சி இல்லை எனத் தெரிவித்திருக்கிறார் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி. ஜேர்மனியில் பாடசாலை ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், பிரபாகரன் மீதான வன்முறை அவரது பிள்ளைகளையும் மற்றவர்களையும் பாதித்தது. என்னுடைய பாட்டியும் (இந்திரா காந்தி) என்னுடைய தந்தையும் (ராஜிவ் காந்தி) கொல்லப்பட்டனர். இதனால் நானும் வன்முறையால் பாதிக்கப்பட்டேன். நான் எனது அனுபவத்திலிருந்தே பேசுகிறேன். வன்முறைக்குப் பிறகு நீங்கள் முன்னேற ஒரே வழி மன்னிப்பு. மன்னிப்பதற்காக நீங்கள் என்ன ...

Read More »

யாழ்ப்பாணத்தில் விகாரைக்கு அடிக்கல் நாட்டினார் ஆளுநர்

DSC_0132-copy

யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைக்கப்படவுள்ள விகாரைக்கு அடிக்கல் நாட்டினார் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே. இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட தையிட்டியில் ஒன்றே கால் ஏக்கர் (20 பரப்பு) காணியை பிக்குகள் தமக்கு சொந்தம் என உரிமை கோரியுள்ளனர். இந்தக் காணியிலேயே விகாரை அமைப்பதற்கான அடிக்கல்லை ஆளுநர் நேற்று நாட்டினார். பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்ட நிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

கழிவு சுத்திகரித்தலை வைத்தியசாலை நேரடியாக கண்காணிக்கும்

image_b87c0e1469

யாழ். போதனா வைத்தியசாலையால் வெளியேற்றப்படும் ஆபத்தான கழிவுகள் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே கடலில் விடப்படும். இதனை இனி வைத்தியசாலை நிர்வாகமே நேரடியாகக் கண்காணிக்கும் என வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் பு.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும், மீறி சுத்திகரிக்காமல் கழிவுகளை கடலில் கலந்தால் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்துச் செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். கடலில் முறையற்ற விதத்தில் வைத்தியசாலைக் கழிவுகள் கலந்து விடப்படுவது குறித்து ஏற்கனவே பல தரப்பட்டவர்களும் குற்றச்சாட்டுக்களை சுமத்திய நிலையில், குறித்த பகுதியை ...

Read More »

யாழில் வைத்தியர்கள் போராட்டம்!

625.0.560.320.160.600.053.800.700.160.90

யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக வைத்தியர்கள், பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இன்று மதியம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் சுமார் அரைமணி நேரம் நீடித்தது. யாழ்ப்பாணம் – கொக்குவிலில் வைத்தியர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்தவர்கள், வீட்டை தாக்கியும் அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சென்றிருந்தது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுத்து தாக்குதலாளிகளை கைது செய்ய வேண்டும் எனக் கோரியுமே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

Read More »

முஸ்லிம் அமைச்சர்களை விசாரியுங்கள் – ராவண பலய கோரிக்கை

ravana

முஸ்லிம் அமைச்சர்கள் ஆயுதங்கள் வைத்திருக்கின்றனர் எனத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே இது விடயத்தில் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என ராவண பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தே கந்தே சத்தாதிஸ தேரர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் மறைத்து வைத்துள்ளனர் என முன்னாள் போராளிகள் வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More »

கூரை மீதேறி பெண் கைதிகள் ஆர்ப்பாட்டம்

z_p01-Female

கூரை மீதேறி பெண் கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெலிகடை சிறைச்சாலை பெண் கைதிகளே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறையில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுத் தருமாறு கோரியே அவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்ற போராட்டத்தை இந்தப் பெண்கள் கடந்த வாரமும் முன்னெடுத்திருந்தனர். ஆனால் ஒரு நாளிலேயே இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தது.

Read More »

தமிழர் மனதில் வெறுப்பை ஊட்டும் போர் வெற்றிச் சின்னங்களை அகற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

ddd

இலங்கை படையினரின் கடந்த கால வெற்றிகளை நினைவுகூரும் விதத்தில் பொது இடங்களிலும் சந்திகளிலும் யுத்தவெற்றிச் சின்னங்கள் காட்சிப்படுத்பட்டிருக்கின்றமை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்துவனவாக இல்லை. அதற்கு மாறாக கடந்த காலங்களில் தம்மீது இழைக்கப்பட்ட கொடுமைகள் தாம் எதிர்கொண்ட ஆற்றொணா துன்ப துயரங்களை மீள நினைப்பூட்டி அவர்கள் மனக்காயங்களை மேலும் சீண்டி நோகப் பண்ணுபவையாகவே உள்ளன. இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதம் மூலம் சுட்டிக்காட்டியிருக்கன்றார் வடக்கு முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன். இந்தப் போர் வெற்றிச் சின்னங்கள் தமிழ் மக்கள் மனதில் வெறுப்பையும் இனவாத ...

Read More »

வடக்கில் இராணுவ முகாம்களை மூடுவது முட்டாள்தனமானது

sarath-fonseka

வடக்கில் பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைப்பதற்காக இராணுவ முகாம்களை  மூடி முகாம்களின் அளவைச் சுருக்கும் இலங்கை இராணுவத் தளபதியின் முடிவு முட்டாள்தனமானது என்று தெரிவித்துள்ளார் அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் எல்லா இடங்களிலும் இராணுவத்தினரின் பிரசன்னம் இருக்க வேண்டிய தேவை உள்ளது. இராணுவம் தெற்கில் தான் இருக்க வேண்டும், வடக்கில் இருக்கக் கூடாது என்று உங்களால் கூறமுடியாது. இராணுவத்தின் பருமனைக் குறைக்க வேண்டிய தேவை இல்லை என்பதே ...

Read More »

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அனான் காலமானார்

45127979_303

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளா் கோஃபி அனான் சுகயீனம் காரணமாக தனது 80 ஆவது வயதில் காலமானர். 1938ஆம் ஆண்டு கானாவில் பிறந்த கோஃபி அனான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக 1997ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டுவரை பதவி வகித்தார். உலக அமைதியை கட்டமைக்க பணியாற்றியமைக்காக 2001ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. உலகின் முக்கிய பொறுப்பில் ஒன்றாக கருதப்படும் ஐ.நா. பொது செயலர் பதவியில் அமர்ந்த முதல் கறுப்பின நபர் என்ற பெருமையைப் பெற்றவர் கோஃபி ...

Read More »