Author Archives: kalai

‘தாயகத் தலைமகன்’ சம்பந்தன் பிரபாகரனால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்- அரியம் புகழாரம்

ariyam

அன்றைய தலைவராக செயல்பட்ட தந்தை செல்வாவுடனும் அதன்பின் தலைவர் பிரபாகரன் காலத்தில் அவருடனும் அனுசரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவராக, தலைவர் பிரபாகரனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவரே ‘தாயகத் தலைமகன்’ சம்பந்தன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். தந்தை செல்வாவின் நாற்பதாவது ஆண்டு நினைவு களுதாவளையில் கலாசார மண்டபத்தில் கடந்த ஞாயிறு இடம்பெற்றபோது தலைமை உரையாற்றிய அரியநேத்திரன் தொடர்ந்து கூறுகையில், தந்தைசெல்வாவின் அறுபதாவது பிறந்த நாள் மட்டக்களப்பில் அப்போதய இலங்கை தமிழரசுகட்சி பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை தலைமையில் இடம்பெற்ற போது அறுபது ...

Read More »

‘கனிதரும் மரங்களையே கரவானவர்களின் கற்கள் பதம்பார்க்கும்’ – முதலமைச்சர்

Vigneswaran

எமது விவசாய அமைச்சர் கௌரவ ஐங்கரநேசன் அவர்கள் விவசாய உற்பத்திகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டு அரிய பல திட்டங்களை உருவாக்கி வருகின்றார். கனிதரும் மரங்களையே கரவானவர்களின் கற்கள் பதம்பார்க்கும். அதனால் அவருக்கு எதிராகக் கற்கள் வீசப்படுவதை எதிர்பார்க்கத்தான் வேண்டும். எனினும் அமைச்சர் ஐங்கரநேசனும் பனங்காட்டு நரி; சலசலப்புக்கு அஞ்சமாட்டார். சதா மக்கள் நலம் பேணும் வேலைகளிலேயே மூழ்கி நிற்கும் ஒரு அமைச்சர். அவரின் வழிகாட்டலின் கீழ் நீங்கள் அனைவரும் இணைந்து கொண்டு விவசாய உள்ளீடுகளைப் பெருக்கப் பாடுபட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ...

Read More »

சுதந்திரமும் சுமந்திரனும்!

suma-editorial frame

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் இலங்கையின் 68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கலந்துகொள்ளும் என்று சுதந்திர தினத்துக்கு சில நாட்களுக்கு முன்பு பெருமையுடன் தெரிவித்திருந்தார். அவர் கூறியதோடு நில்லாமல் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் சுதந்திர தின நிகழ்விலும் கலந்துகொண்டார். சுமந்திரனைப் பொறுத்தவரையில் சுதந்திர தினத்தைக் கொண்டாட அவருக்கு தகுதியும், உரிமையும் உண்டு. ஏனெனில் அவர் பல விதங்களில் சுதந்திரம் பெற்றவர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் அவர் ஜனாதிபதியாக இருந்தபோதே கிரிக்கற் விளையாடவும், ...

Read More »

வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்காது – அல் ஹுசேன்

humanRights_Commissioner

போர்க்குற்ற விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பை ஏற்றுக் கொள்ளுமாறு சிறிலங்காவுக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்காது என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார். நான்கு நாள் சிறிலங்கா பயணத்தின் முடிவில் நேற்று பிற்பகல் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ”நாங்கள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதையும் திணிக்கமாட்டோம். சிறிலங்கா அதிபர் தனது தெரிவையும் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளார். நாம் எமது முன்னுரிமையான விடயங்களை வெளிப்படுத்தியுள்ளோம். பாதிக்கப்பட்டவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் சிறிலங்கா எத்தகைய முடிவுகளையும் எடுக்கலாம். அது எமக்கு பரவாயில்லை. பொறிமுறை  நடுநிலையானதாகவும் சுதந்திரமானதா ...

Read More »

ஐங்கரநேசனுக்கு எதிராகப் பிரேரணை!

aynkaranesan

வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக மாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானத்தின் ஆசியுடன், சுமந்திரன் ஆதரவாளர்களால் தயாரிக்கப்ட்டு, புளொட் உறுப்பினர் லிங்கநாதனால் கொண்டுவரப்பட்ட பிரேரணை  சபையில் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று (9-02-2016) கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன்போது, இரணைமடு நீர்ப்பாசன திட்டம் தொடர்பிலான செயற்பாடுகள், பார்த்தீனிய ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகள் , பளை பிரதேசத்தில் நிறுவப்பட்ட காற்றாலை தொடர்பிலான விடயம்,சுன்னாக நிலத்தடி நீர் தொடர்பிலான செயற்பாடுகள், மருதங்கேணி கடல்நீரை நன்னீர் ஆக்கும் செயற்பாடு, கார்த்திகை மர நடுகை, ...

Read More »

மனித உரிமைகள் ஆணையாளருடனான சந்திப்பில் நடந்தது என்ன? – கூட்டமைப்பு விளக்கம்

sam-al

ஐ.நா வின் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்ததாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனை இன்று கொழும்பில் வைத்து சந்தித்தபோதே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இந்த ...

Read More »

‘தேசம்’ தொடர்பில் தமிழ் மக்களே இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும் – கஜேந்திரகுமார்

tpc-proposal18

தமிழரின் தேசம் என்ற வார்த்தையை பிரயோகிப்பதா இல்லை மக்கள் கூட்டம் என்ற வார்த்தையை பிரயோகிப்பதா என்பது தொடர்பில் தமிழ்த் தலைமைகளினுள் விவாதங்கள் காணப்படுவதே தற்போதைய யதார்த்தமாகவுள்ளது. இது தொடர்பில் தமிழ் மக்களே இறுதித் தீர்மானம் எடுக்கவேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட முன்வரைபு அறிமுகத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், தமிழ் ...

Read More »

சர்வதேச விசாரணை வேண்டாம் – அல் ஹுசைனிடம் வலியுறுத்திய அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகள்

peedathipathi

இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சர்வதேச விசாரணை பொறிமுறை அவசியமில்லை என்று மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் நேற்று கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்ததுடன் மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் தேரர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன் போதே கலகம ஸ்ரீ தம்மதஸ்ஸ மற்றும் திப்படுவாவே ஸ்ரீசுமங்கல தேரர் ஆகியோர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர். ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அல் ...

Read More »

வட-கிழக்கு மாகாணங்கள் இணைந்த ‘தமிழ் மாநிலம்’ – கிளி. மக்கள் வலியுறுத்து

kili

இலங்கையில் ஒற்றையாட்சி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஆகியவை மாற்றப்பட்டு சமஷ்டி அடிப்படையிலான ஆட்சிமுறை அமைக்கப்பட்டு வட-கிழக்கு மாகாணங்கள் இணைந்த ‘தமிழ்  மாநிலம்’ ஒன்று உருவாக்கப்பட்டு வேண்டும் என கிளிநொச்சி மக்களால் ஆலோசனை  முன்வைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை அறியும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது. அவ்வகையில் நேற்று, கிளிநொச்சியில் நடைபெற்ற கருத்தறியும் கூட்டம் ஒன்றிலேயே இந்தியாவில் உள்ளது போன்ற சமஷ்டி முறை இலங்கையிலும் உருவாக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் பொதுமக்களின் கருத்துக்களை அறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு நேற்று (08-02-2016) கிளிநொச்சியில் தனது முதல் ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 55

nkna

படையினர் மிகவும் அவதானமாகவே தங்கள் நகர்வை மேற்கொண்டிருந்தனர். டாங்கிகள் இரண்டு கவசவாகனங்கள் இரண்டு என்பவற்றின் துணையுடன் மூன்று அடுக்கு வடிவமைப்பில் ஒவ்வொரு வரிசையும் ஒன்றன் பின் ஒன்றாக முன்னேறினர். இரு அணிகள் படுத்து காப்புக் கொடுக்க ஒரு அணி ஓடிச் சென்று முன்னால் படுப்பதும் பின்பு அடுத்த அணி குனிந்து ஓடி முன்னால் படுப்பதும் என மாறி மாறி செயற்பட்டவாறு முன்னேறினர். காகம் குருவி கூடக் காணப்படாமல் அப்பிரதேசம் வெறிச்சோடிப் போயிருந்த போதிலும் படையினர் மிகவும் எச்சரிக்கையாகவுமே நகர்வை மேற்கொண்டனர். திடீரென நிலமட்டத்திலிருந்து  வளிவந்த ...

Read More »