Author Archives: kalai

தமிழரசே தாய்க்கட்சி, துரோகிகளுக்கு பாடம் புகட்டுவோம் – அருந்தவபாலன்

itak arunthavam

துரோகிகளுக்கு இந்த தேர்தலில் பாடம் புகட்டுவோம் என தமிழரசுக் கட்சியின் அமைப்பாளர்  அருந்தவபாலன் தெரிவித்துள்ளதாக தமிழரசுக் கட்சி உறுப்பினர் செய்திவெளியிட்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் மார்டின் வீதி அலுவலகத்தில் கட்சி உறுப்பினர்களிடையே உரையாற்றிய அருந்தவபாலன் அவர்கள்,   “தமிழரசே தலையாய தாய்க்கட்சி அதனை இணைந்து பலப்படுத்தி வெற்றிக்கான வியூகங்களை வகுக்கவேண்டும். மாற்றாரின் பொய்ப்பிரசாரத்திற்கு எடுபடக்கூடாது. கூட்டமைப்பை பலப்படுத்தி துரோகத்தை அம்பலப்படுத்துவோம்.” என்று தெரிவித்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவரின் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை அருந்தவபாலன் அவர்களின் அதிருப்தியைச் சமாளிக்க கடந்தவாரம் தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடம் ...

Read More »

போராளிகளை அசிங்கப்படுத்திய தீபச்செல்வன் – வலுக்கும் எதிர்ப்பு

theepachelvan

மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் குடும்பங்களிலிருந்து ஒருவர்தான்  விளக்கேற்றவேண்டும் என்று மூத்தபோராளி காக்கா அண்ணா அவர்களும் தடுப்பிலிருந்த வந்த போராளிகள் கூட்டமைப்பும் விடுத்தவேண்டுகோளுக்கு கவிஞர் தீபச்செல்வன் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். கடந்தவருடம் நாடாளுமன்ற உறுப்பபினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள்,   தேசியத் தலைவர் அவர்களின் உரையை தொகுத்து தனதுரையாக்கி வெளியிட்டதோடு மட்டுமல்லாது கனகபுரம் துயிலுமில்லத்தில் பொதுச் சுடரை தானே ஏற்றவேண்டும் என அடம்பிடித்து ஏற்றியதோடு முழங்காவில் துயிலுமில்லத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களை பொதுச் சுடரேற்ற ஒழுங்கமைத்துகொடுத்தார் இதற்கு மக்கள் மத்தியில் விசனம் தெரிவிக்கப்பட்டது. ...

Read More »

உடைந்தது தமிழரசுக் கட்சி உதயமாகிறது ஜனநாயக தமிழரசு?

jtk

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முனைப்புக்கள் தீவிரம் பெற்றுள்ள நிலையில் தமிழரசுக்கட்சியின் தீவிர செயற்பாட்டாளர்களாக விளங்கிய ஒரு குழுவினர் ஜனநாயக தமிழரசுக்கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றுக்கு தயாராகியுள்ளதாக தெரியவருகிறது. தமிழரசுக்கட்சியின் முன்னாள் இளைஞர் அணித் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாட்டில் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், மறவன்புலவு சச்சதிதானந்தம் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் உட்பட்டவர்கள் உள்ளடங்கலாக குறித்த கட்சி தேர்தலை எதிர்கொள்ள நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக அறியவந்திருக்கிறது. இதன் சின்னமாக மேல்வீட்டைத் தெரிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனிடையே ஜனநாயக ...

Read More »

என்னுள் மையம் கொண்ட புயல்! – கமல்ஹாசன்

Kamalhasan

என்னுள் மையம் கொண்ட புயலை உங்கள் கரை வரை கொண்டு சேர்க்கும் தீரா ஆசையின் முதல் அலை இது. இன்னும் எவ்வளவு காலம் தமிழர் தம் கண்முன் நடக்கும் அநீதிகளையும் அநியாயங்களையும், மக்கள் செல்வங்கள் எல்லாம் தனியார் தம் ஆசைக் கோட்டைகள் கட்ட மண்ணெடுக்கும் மேடாய் மாறிவருவதையும் பார்த்துக்கொண்டிருப்பர்? இந்தக் கேள்வி பல கோடி மனங்களில் எழத்துவங்கி கால் நூற்றாண்டாகிவிட்டது. என் மனமும் இதற்கு விதிவிலக்கல்ல. தானுண்டு தன் வேலையுண்டு என்று கண்டும் காணாமல் இருந்த தமிழர்களில் நானும் ஒருவன். இந்த மெத்தனத்துக்கான தண்டனையைப் ...

Read More »

தேசியக்கொடி மரியாதையுடன் மாமனிதர் பொன் சத்தியநாதனின் இறுதிநிகழ்வு!

drpon

தமிழ்த்தேசியப் பணியில் ஒப்பற்று உழைத்த பெருமனிதர் பொன் சத்தியநாதன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு இன்று 22 – 09 – 2017 அன்று வெள்ளிக்கிழமை தமிழ்த்தேசியத்திற்கான மதிப்பளித்தலுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. காலை பத்து மணிக்குத் தொடங்கிய தேசிய வணக்க நிகழ்வில் பொன் சத்தியநாதன் அவர்களின் புகழுடலுக்கு தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களால் தமிழீழத் தேசியக்கொடி போர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உரையாற்றிய வசந்தன் அவர்கள், “பொன். சத்தியநாதன் அவர்களின் பணிகளும் செயற்பாடுகளும் பல்தளங்களில் அறியப்பட்டபோதும் அவரின் அனைத்துச் செயற்பாடுகளும் ...

Read More »

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் மறைவு! (இணைப்பு 2)

pon4

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்கும் அபிமானத்துக்குரியவருமாக விளங்கிய தமிழ்த் தேசிய உணர்வாளரும் தீவிர செயற்பாட்டாளருமான வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் அவர்கள் இன்று அவுஸ்திரேலியாவில் இயற்கை எய்தியுள்ளார்.

Read More »

ஒற்றையாட்சி எம்மை அடிமைகள் ஆக்கிவிடும் – எச்சரிக்கும் முதலமைச்சர்

c.v.vigneswaran

“அரசியல் பிரச்சனையானது எங்களுக்கு ஏற்பட்ட ஒன்று. நாங்கள் தான் பாதிக்கப்பட்டவர்கள். எமது நிலையில் இருந்துதான் பிரச்சனையை அணுக வேண்டுமே ஒளிய கொழும்பின் பார்வையில் இருந்தல்ல. ஒற்றையாட்சியில் 13வது திருத்தச் சட்டத் தீர்வானது என்றென்றைக்குமே தமிழ் மக்களைத் தமது அடையாளம் தெரியாமல் ஆக்கிவிடும். ஒற்றையாட்சி எம்மை என்றென்றைக்குமே அடிமைகள் ஆக்கிவிடும். எமது தனித்துவம் பேணப்பட வேண்டுமென்றால் வெறும் 13வது திருத்தச் சட்டத் தீர்வை நாங்கள் முற்று முழுதுமாக எதிர்க்க வேண்டும்.” என வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நாவலர் சிலையினைத் ...

Read More »

சங்கரி அரசியலுக்கு முழுக்கு – விக்கி கையில் உதயசூரியன் ?!

viki-ananthasangari

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப்பொறுப்பை வடமாகாண முதலமைச்சர்  விக்கினேஸ்வரனிடம் கையளித்துவிட்டு அரசியலிலிருந்து ஓய்வுபெறும் முடிவை ஆனந்த சங்கரி எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒற்றையாட்சிக்குள் வட கிழக்கு இணைப்பின்றி ஒரு அரைகுறைத் தீர்வை தமிழரசுக் கட்சியின் உதவியுடன் தமிழர்கள்மீது திணிக்க மத்திய அரசாங்கம் முயல்கிறது. இதற்குப் பெருந்தடையாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இருப்பதால் அவரை அகற்றும் முயற்சியில் தமிழரசுக் கட்சி ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்த் தேசியத்தின்பால் உறுதியோடு நிற்கும் முதலமைச்சரை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலைமையேற்க வைத்து அவரின் கீழ் அனைவரும் அணிதிரள வேண்டும் என ...

Read More »

சிறிலங்காவுக்கு எதிரான விக்கியை நீக்கவேண்டும் – சுமந்திரன்

Sumanthiran-and-vigneshwaran

தற்போதைய நிலைமையின் படி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது நாட்டுக்கும் இனங்களிடையேயான நல்லிணக்கத்துக்கும் நல்லது என  தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற  உறுப்பினர்  ஆபிரகாம் சுமந்திரன்  சிங்கள ஊடகத்துக்கு தெரிவித்ததாக தமிழரசுக் கட்சியின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ”நான் தொடர்ச்சியாக விக்கினேஸ்வரன் அவர்களை நீக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளேன். இது எனது தனிப்பட்ட நிலைப்பாடு. கட்சி இதை இன்னும் ஏற்கவில்லை. இவரை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருந்தாலும் இவரை நீக்குவதற்காக நான் சதித் திட்டம் தீட்டி ...

Read More »

விக்கியை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்?

srisuma

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலகிச் சென்றபோது மக்கள் மத்தியில் ஏற்பட்ட சோகம்போல் வடமாகாண முதல்வரின் நடவடிக்கையால் வடக்கு மாகாண மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். நேற்றுவரை முதல்வருக்கெதிராக சில கறுப்பாடுகள் சதிசெய்வதாக ஊடகங்களில் சுமந்திரன் ஆதரவு மாகாண சபை உறுப்பினர்களை தாக்கிய சிவஞானம் சிறிதரன், முதல்வருக்கெதிராக ஆரம்பத்திலிருந்தே குழப்பங்கள் விளைவித்த சயந்தன்- அஸ்மின் – சிவஞானம் அணியின் முதல்வருக்கெதிரான நடவடிக்கைக்கு கிளிநொச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர்களை ஒத்துழைக்குமாறு பணித்துள்ளார். வடமாகாணத்தில் முதல்வருக்கு ...

Read More »