Author Archives: kalai

கிளிநொச்சி மாவட்டத் தேர்தல் முடிவுகள் – இரண்டு சபைகளில் பெரும்பான்மை இல்லை

results kili

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் கிளிநொச்சி மாவட்ட உத்தியோகபூர்வத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கரைச்சி பிரதேச சபை மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில்  ஆட்சி அமைப்பதற்கு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

Read More »

‘உங்களின் பிள்ளைகள், தேசியத்தலைவர் வளர்த்த தம்பிகள்’

ltt logo

“நாங்கள் உங்களின் பிள்ளைகள், உங்கள் மனம் நிறைந்த  தேசியத்தலைவர் வளர்த்த தம்பிகள். ஒருபோதும் தவறிழைக்க மாட்டோம். தவறி செய்யின் அப்போது எம்மைத் தண்டியுங்கள். இப்போது நடைபெறப் போகும் தேர்தலில் எம்மை வெற்றியடைய செய்யவும் எமக்கான நல்ல அரசியல் தலைமையை நாம் உருவாக்கி அரசியல் வழி செயற்பாட்டு வெற்றிகளை பெறவும் எமக்காக இம்முறை உதவுவீர்கள் என்று நம்புகின்றோம்” என தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி (புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி)  மக்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர். (ஊடக அறிக்கை PDF வடிவில் ) தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர்  விடுத்துள்ள ...

Read More »

சாவு அறிவித்தல்  – தருமதுரை புஸ்பநாயகி

வயாவிளான் தெற்கு வயாவிளானை நிரந்தர வதிவிடமாகவும் பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தருமதுரை புஸ்பநாயகி அவர்கள் இன்று (28.12.2017 வியாழக்கிழமை ) சாவடைந்தார். இவர் காலஞ்சென்றவர்களான சிங்கநாயகம் ஆச்சிமுத்து தம்பதிகளின் மூத்த மகளும் காலஞ்சென்ற தருமதுரையின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற கந்தையா செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும், சிற்சபேசன், மலரினி, துஷ்யந்தன், தர்சன் (விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவர் தணிகை ) ஆகியோரின் அன்புத் தாயாரும், தெய்வசுதா, சிறிநாதன், சர்மிளா, வரதப்பிரபாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும், சதானநந்தநாயகம், கமலநாயகி, கனகநாயகி, சாந்தநாயகம், வரதநாயகி, அமரர் கலாநாயகி, ...

Read More »

சூடு பிடிக்கும் தேர்தல்களம் : அதிரடி முடிவெடுத்த கஜேந்திரகுமார்

TNC

உள்ளூராட்சிசபைத் தேர்தலுக்காக சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினருக்கும் கஜேந்திரகுமாரின் அகில இலங்கைத் தமிழ் காங்கிரசிற்கும் இடையில்  உடன்பாடு ஏற்படாமற்போனதையிட்டு இருவரும் தத்தமது அணிகளைப் பலப்படுத்தும் செயற்திட்டங்களில் இறங்கியுள்ளனர்.   தனியாகப் போட்டியிடப் போவதாக நேற்று அறிவித்த தமிழ்க் காங்கிரசினர்,  சுரேஸ் பிரேமச்சந்திரனின் கூட்டணி அறிவிப்பிற்குப் பின்னர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றியதாக அறியமுடிகிறது. களத்தில் நிற்கும் எதிர்த்தரப்புக்கு சவால் அளிக்கக்கூடிய கூட்டு ஒன்றை உருவாக்கும் நோக்கில் கட்சி முக்கியஸ்தர்களுடன் கலந்தாலோசித்த கஜேந்திரகுமார் அவர்கள் தனது தலைமையிலான இரு கட்சிகளையும் புதிய கூட்டாக அறிவித்து அக்கூட்டுக்கு ...

Read More »

கஜேந்திரகுமார் ஆதரவாளர்களை நோக்கி ஒரு பகிரங்க மடல்!

ககு

மதிப்புக்குரிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களுக்கு! திரு கஜேந்திரகுமார் அவர்களின் 2016 ம் ஆண்டு, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வினை த.தே.ம.முன்னணியினர் மாற்றியமைக்கான விளக்கவுரைக்  காணொலி (பிந்திக்கிடைத்த) தொடர்பாக தொலைபேசியூடாகவும் முகநூலினூடாகவும் பலர் என்னுடனும் பொதுவெளியிலும் பகிர்ந்து கொண்டிருக்கும் விடயங்கள் தொடர்பான எனது நிலைப்பாட்டு மடல் இது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்றுக்கொள்வதைப் போலவும் திரு கஜேந்திரகுமார் அவர்கள்  ‘விளக்குவதைப்போலவும்’  2016 ம் ஆண்டு தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வை தனியே தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கான நிகழ்வாக ...

Read More »

அடம்பிடிக்கும் கஜேந்திரகுமார் – சிக்கலில் பொது எதிரணி!

sureshgajen

தமிழரசுக் கட்சியின் விலைபோகும் அரசியலுக்கு துணைபோகமாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியே வந்த ஈபிஆர்எல்எவ் கட்சியுடன் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து உருவாக்க இருப்பதாக சொல்லப்பட்ட எதிரணியில் குழப்பங்கள் நிலவுவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்திலிருந்தே பொது எதிரணியானது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதே கஜேந்திரகுமாரின் விரும்பமாக இருக்கிறது. ஆனால் அதற்கு உடன்படாத ஈபிஆர்எல்எவ் கட்சியினர் பொதுச் சின்னம் ஒன்றைத் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுப்பெறலாம் என்ற யோசனையை முன்வைத்தனர்.  தேர்தல் ஆணையம் புதிய ...

Read More »

புதிய கூட்டணிக்கு சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு – சுரேஸ்

suresh

“தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக புதிய கூட்டனி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுச் சின்னம் ஒன்றுக்கு வர ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈபிஆர்எல்எப்) இழுதடித்து வருவதாகவும் இது தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட்ட சிலர் தெரிவித்துள்ளனர்” என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இச்செய்தி தொடர்பாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, பொதுச் சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கஜேந்திரகுமாரும் நானும் கூட்டாகக் கோரிக்கைவிடுத்திருந்தோம் ஆனால் அக்கோரிக்கையை அவர்கள் நிராகரித்துவிட்டார்கள். மாற்றுத்திட்டம் தொடர்பான பேச்சுக்கள் ...

Read More »

புலிகளுக்காக கட்சியை உடைத்தார் சுரேஸ் – வரதராஜப் பெருமாள்

1111

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது என்பது தவறான கருத்து, தங்களது முயற்சியால் உருவானது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பலதடவைகள் சொல்லியிருக்கின்றார்.  என்று வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். வரதராஜப் பெருமாள் தலைமையிலான குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைவது தொடர்பாக செய்திகள் வெளிவந்த நிலையில் அரசாங்கத் தமிழ் பத்திரிகைக்கு வரதராஜப்பெருமாள் அவர்கள் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஈபிஆர்எல்எவ் பிளவு தொடர்பாக கருத்துத் தெரிவித்த முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்க முன்னரே ...

Read More »

புளொட்டின் ‘வீரமக்கள்’ மாதம்தான் இனி மரநடுகை மாதம்?

புளொட்

கார்த்திகை மாதத்தை மரநடுகை மாதமாக நீடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான் ஒரு விவசாயியாக இருப்பதால் இதை ஆனி அல்லது ஆடிக்கு மாற்றுவதையே விரும்புவதாக தற்போதைய வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் தெரிவித்துள்ளார். முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தனது அமைச்சுக் காலத்தில் அவரால் முன்வைக்கப்பட்ட மரநடுகை மாதக்கருப்பொருள் 2014 ஆம் ஆண்டிலிருந்து வடமாகாண சபையின் ஒப்புதலுடன் செயல்வடிவமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. மரநடுகை மாதமாக கார்த்திகை மாதம் தெரிவு செய்யப்பட்டதற்கான பின்னனி பற்றி ஐங்கரநேசன் விளக்கும்போது தெரிவித்ததாவது; வடக்கில் மரநடுகையை முன்னெடுப்பதற்குச் சாலச்சிறந்ததொரு மாதமாகக் கார்த்திகை மாதமே ...

Read More »

ஈபிடிபியைக் காட்டித் தப்பிக்க முயலும் தீபச்செல்வனின் ஈபிடிபி உறவு!

23758368_151571765594130_612703811_n

மாவீரர் நாளுக்கு விளக்கேற்றுவது தொடர்பில் கவிஞர் தீபச்செல்வன் பதிவேற்றிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவா் தனது முகநூலில் தான் ஈபிடிபியின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  சந்திரகுமார் தரப்பையே குறிப்பிட்டு பதிவை மேற்கொண்டதாகவும் அதனை சிலா் திரிபுபடுத்திவிட்டதாகவும்  தெரிவித்துள்ளார். தீபச்செல்வனின் பதிவுக்கு பதில் எழுதிய  சுவிஸ் சிங்கம் அவர்கள் தீபச்செல்வனின் ஈபிடிபி உறவை அம்பலப்படுத்தியுள்ளார். சுவிஸ் சிங்கம் அவர்களின் முகநூல் பதிவு: விடுதலைப்புலிகள் காலத்திலேயே ஈபிடிபியுடன் உறவை கொண்டுள்ள தீபச்செல்வன் வெளிவரும் ஆதாரங்கள் —————————————————————————– மாவீரர் நாளுக்கு விளக்கேற்றுவது தொடர்பில் கவிஞர் தீபச்செல்வன் ...

Read More »