Author Archives: kalai

எமது விடயத்தில் மௌனம் காப்பதேன்? சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகள் கடிதம்

prisoner

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய நீங்கள் மௌனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பி இரா.சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகள் கடிதம் அனுப்பியுள்ளனர், தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை மக்கள் ஒன்றியம் இணைந்து அனுப்பி வைத்துள்ள அந்த கடிதத்தில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கைதிகள் விடயத்தில் சரியான தீர்;மானத்தினை முழுமையாக எடுப்பீர்;கள் என்ற நம்பிகையில் தான் கடந்த காலத்தில் கைதிகளினால் முன்னெடுத்த உண்ணாவிரதம் முடிவுக்கு வந்ததை தாங்கள் அறிவீர்கள். ஜனாதிபதி தொலைபேசியில் ...

Read More »

2013 தேர்தல் விஞ்ஞாபன அடிப்படையிலேயே பேரவையின் நடவடிக்கைகள்: வடமாகாண உறுப்பினர்களுக்கு முதல்வர் பதில்

Vigneshwaran

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2013ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபன அடிப்படையிலேயே தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகளை எடுத்துச் செல்கின்றோம்” எனத் தெரிவித்திருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், “இப்பொழுதும் நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே செயற்பட்டு வருகின்றோம். தமிழ் மக்கள் பேரவையுடன் எனக்குத் தொடர்பிருந்தமையால் அதனைக் காரணங்காட்டி நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முரணான வகையில் நடந்து கொள்ளப் பார்க்கின்றேன் என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு அபத்தமான குற்றச்சாட்டு” எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். மாகாணசபை ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கூட்டம் இன்று புதன்கிழமை மாலை 5.00 ...

Read More »

சம்பந்தரின் அருவருக்கும் அலட்சியம்! – -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

sampanthan

உயிர் பிரிந்த சடலம் போலாகிவிட்டது, கூட்டமைப்பின் தலைமை. அதன் அலட்சியம் எல்லை மீறிவிட்டது. புதிதாய்த் தொடங்கப்பட்ட, தமிழ்மக்கள் பேரவை தந்த அதிர்வால், தமிழ் கூட்டமைப்புக் கட்டிடத்தின், தாங்கு தூண்கள் ஒவ்வொன்றாய் அசைந்து கொண்டிருக்கின்றன. முதலமைச்சர் விக்னேஸ்வரன், பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், பேராசிரியர் சிற்றம்பலம் போன்ற, கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலர், கூட்டமைப்பின் எதிர்ப்பை அலட்சியம் செய்து நடக்கத்தொடங்கியிருக்கின்றனர். அதுபற்றி எந்தக் கவலையுமில்லாமல், எவர் எப்படிப் போனால் எனக்கென்ன எனும் அலட்சியத்துடன், ‘யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க’ என்று பாடாத குறையாய், தலைவர் சம்பந்தன் அலட்சியத்தின் ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 53

nkna

அன்று இரவு எட்டுமணியளவில் சிவம் அணியினர் தங்கியிருந்த முகாமுக்கு அரசியல்த்துறைப் பொறுப்பாளர் வந்திருந்தார். அவர் வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் எல்லோரையும் ஒரு இடத்தில் கூடும்படி கட்டளை வந்தது. வழமையாக யாராவது பொறுப்பாளர்கள் வருவதாக இருந்தால் முதலில் போராளிகள் கூட்டப்பட்டுவிடுவார்கள். அதன் பின்பே அவர்கள் வருவார்கள். இன்று அவர் வந்த பின்பே கூட்டம் கூட்டப்பட்டது சிவத்துக்கு எதோ வித்தியாசமாகப்பட்டது. யாரோ ஒரு முக்கிய பொறுப்பாளர் வரப்போகிறார் என்ற விஷயம் தங்களுக்கே தெரியக்கூடாது என்பதற்காக அப்படி ஒரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனக் கருதினான் சிவம். மாவீர் ...

Read More »

எகிறிய ஆர்னோல்ட், சயந்தன்! அடக்கிய அனந்தி,சிவாஜிலிங்கம் !!

ssaa1

‘வடக்கு முதலமைச்சர் வேறெங்கும் இயங்கக்கூடாது! அழுத்திக் கூறிய வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள்’ என்று தலைப்பிட்டு தமிழரசுக் கட்சி ஆதரவு ஊடகங்கள் சில பரபரப்பு செய்திகளை வெளியிட்டுள்ளன. ஒட்டுமொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களும் விக்கினேஷ்வரன் அவர்கள் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பொறுப்பை ஏற்றதை விரும்பவில்லை என்ற பாணியில் செய்தியாக்கின. ஆனால் உண்மையில் அந்தக் கருத்தை வலியுறுத்தி உரையாற்றியவர்கள் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களான ஆர்னோல்ட், சயந்தன் மற்றும் விந்தன் ஆகியோர் மட்டுமே என்பதே உண்மையாகும். முதலமைச்சர் உடனான சந்திப்புக்கு முன்னர், ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 52

bookebaylow

பொழுது விடிவதற்கு முன்பாகவே சகல அணிகளும் வாகனங்களில் ஏற்றப்பட்டு பல்லவராயன்கட்டிலுள்ள ஒரு முகாமுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டனர். ஏற்கனவே காயமடைந்த போராளிகள் முதலுதவியின் பின்பு நேரடியாகவே கிளிநொச்சி மருத்துவப்பிரிவு முகாமுக்கு ஏற்றப்பட்டுவிட்டனர். வித்துடல்களும் கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு பின் அஞ்சலிகளுக்காக அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டன. அன்று முகாம் பெரும் சோகமயமாகவே காணப்பட்டது. போராளிகள் ஒருவருடன் ஒருவர் கதைப்பதே அரிதாக இருந்தது. ஒவ்வொருவரும் ஏதோ தாங்கள் பெரும் குற்றத்தை இழைத்துவிட்டது போன்று மனம் வாடிப்போயிருந்தனர். ஏராளமான தோழர்கள், தோழியரை இழந்தும் கூட முகாம் தாக்குதல் பெரும் தோல்வியில் முடிந்ததை ...

Read More »

கூட்டமைப்பின் சறுக்கல்களும் பேரவையின் உருவாக்கமும்!

tpc

கடந்த வார இறுதியின் மாலைப்பொழுதொன்றில் உருவாகிய தமிழ் மக்கள் பேரவை பற்றிய செய்திகளும் அதை ஒட்டிய அரசியல் பரபரப்பும் இன்னமும் அடங்கியபாடாகத் தெரியவில்லை. இது தொடர்பில் ஆதரித்தும், எதிர்த்தும் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழ் அரசியல் பெருவெளியில் அண்மைக் காலங்களில் இடம்பெற்ற ஓர் குறிப்பிடத்தக்க நிகழ்வு இது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஓர் மாற்று அரசியல் சக்தியாக இது  உருவாகும் எனவும் இதனை நோக்குபவர்களும் உண்டு. அதேநேரம் தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் என்பது பத்தோடு பதினொன்றாக இன்னுமொரு நிகழ்வு ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 51

nkna

சிறிது நேரத்தில் காலை உணவு வந்தது, எல்லோரும் சாப்பிட்டுவிட்டு தென்னை நிழல்களிலும் இடையிடையே நின்ற மாமரங்களின் கீழும் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டார்கள். ஆனால் எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு பெரும் சாதனையை நிகழ்த்தப் போகும் மகிழ்ச்சி படர்ந்து கிடந்தது. சிவத்துக்கு ஓய்வெடுக்க முடியவில்லை. காணியை ஒருமுறை சுற்றிப் பார்ப்பதற்காக முடிவெடுத்த அவன் எழுந்து புறப்பட்டான். ரூபாவும் “சிவம் நானும் வாறன்”, என்றவாறே அவனுடன் இணைந்து கொண்டாள். மலையவன் அவர்களைப் பார்த்து, “இரண்டு தளபதியள் வாறமாதிரித்தான் கிடக்கு”, என்றான் கேலியாக. உண்மையாகவே அவர்களின் அந்த உயரமான கட்டுமஸ்தமான ...

Read More »

தமிழ் மக்கள் பேரவை : ஏனிந்த பயம் பதற்றம் பதகளிப்பு?

eninthapathakalippu

சுமந்திரன் எமது கொள்கையை ஏற்றுக்கொண்டால் அவரும் வந்து எம்மோடு இணைந்துகொள்ளலாம் என்றார் விக்கினேஸ்வரன். அனைவரும் வந்து எமது பேரவையை பலப்படுத்தியே தமிழர் தீர்வு காணவேண்டும் என்றார் மருத்துவர் லக்ஸ்மணன். உடனே கருணாவையும் டக்ளசையும் பேரவையில் இணைந்துகொள்ள அழைப்பு என ஒரு செய்தியாக்கினார் சரவணபவன். அதனை தலைப்பு ஆக்கியது தமிழ்வின். அதனை உரித்துபோட்டது ஜேவிபிநியுஸ். கருணாவை கூப்பிட்ட கதை உண்மைதான் அவரோடு கோல் பண்ணி உறுதிப்படுத்தினேன் எனச்சொன்னார் அரியநேத்திரன். தான் கோல் பண்ணி கதைப்பவரை கூப்பிட்டது தவறு என்று துள்ளிக்குதித்தார் அவர். உடனே துரோகிகளின் கூட்டான ...

Read More »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 50

bookebaylow

தொலைத்தொடர்பு அறையிலிருந்து சிவம் சிரித்த முகத்துடன் வெளியே வந்தான். சுகுணன் ஆவலுடன் அவனிடம் போய், “என்ன சிவமண்ணை என்னவாம்?”, எனக் கேட்டான். சிவம், “ஒரு பெரிய தாக்குதலுக்கு எந்த நேரமும் திடீரெண்டு வெளிக்கிடத் தக்க வகையில் தயாராய் இருக்கட்டாம்”, என்றான். அவன் வார்த்தைகளில் எல்லையற்ற மகிழ்ச்சி இழையோடியது. “பெரிய தாக்குதலோ… எதுவாயிருக்கும்?” எனக் கேட்டாள் ரூபா. “அதைப்பற்றி ஒண்டும் சொல்லேல்ல.. வழக்கமாய் சொல்லுறேல்ல தானே.. நான் நினைக்கிறன்..”, எனக் கூறிவிட்டு இடை நிறுத்தினான் சிவம். “சொல்லுங்கோ.. நினைச்சதும் நான் நினைச்சதும் ஒண்டோ எண்டு பாப்பம்”, ...

Read More »