jail

வெலிக்கடைச் சிறையிலிருந்து வெளிநாடுகளுக்கு 3950 சட்டவிரோத அழைப்புக்களாம்!

வெலிக்கடை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவரும் சிறைக்கைதிகள்  சிலர், வெளிநாடுகளுக்கு 3950 சட்டவிரோத அழைப்புக்கள் ஏற்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுக்கு பொறுப்பான  சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லத்தீன் தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“தண்டனை அனுபவித்துவரும் சிறைக்கைதி ஒருவர் சட்டவிரோத அழைப்பொன்றை ஏற்படுத்துவதற்கு அவரிடமிருந்து 2000 ரூபாய் பணம் அறவிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு சட்டவிரோத அழைப்புக்கள் நைஜீரியா, மலேசியா போன்ற  நாடுகளுக்கே  அதிகளவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் 3950 சட்டவிரோத அழைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு சட்டவிரோத அழைப்புக்களை ஏற்படுத்த உதவியவர்கள் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய அரசியல் கைதிகள் தொடர்பில் விசாரணையை தற்போது ஆரம்பித்துள்ளோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*