vijayakala

நாட்டைவிட்டு வெளியேறுகிறாரா விஜயகலா?!

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்னர், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிவித்துறு ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது.

பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் பிரசார செயலாளர் துஷார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா வெளிநாடு செல்வதற்கு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அவருக்கு எதிரான விசாரணைகளை தீவிரப்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம். அவர் வெளிநாடு சென்றால் விசாரணைகள் தடைப்படும்.

அதுமாத்திரமின்றி விஜயகலாவின் உறுப்புரிமையை ஐக்கிய தேசிய கட்சி ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, சட்ட அமுலாக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கட்சியின் தலைவர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*