GL-peiris

உடனடியாக தேர்தலுக்கு வலியுறுத்துகிறது மஹிந்த அணி!

மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து அரசாங்கம் உடனடியாக தேர்தல் ஒன்றை நடத்;த வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தினார்.

கொழும்பில் இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இந்த அரசாங்கமானது இன்று ஒரு நாடகத்தைத் தான் அரங்கேற்றி வருகிறது. நாட்டில் இன்று அரசாங்கம் எனும் ஒன்றே இல்லை என்பதுதான் உண்மையாகும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீதியமைச்சானது பெற்றோல் மட்டும் டீசலின் விலைகள் அதிகரிக்கப்படும் என்று கூறியிருந்தது.

இந்த அறிவிப்பு வந்து 11 மணி நேரங்களுக்குள் பெற்றோலிய அமைச்சானது, ஒருபோதும் இவ்வாறு விலையேற்றத்தை மேற்கொள்ளப்போவதில்லை என்று குறிப்பிட்டது.

அனைத்து அமைச்சுக்களும் ஒரு அரசாங்கத்தின் கீழ் இருக்கும்போது, எதற்காக இவ்வாறு இருவேறு கருத்துக்களுடன் செயற்பட வேண்டும்? அமைச்சரவைக் கூட்டத்துக்கு அனைத்து அமைச்சர்களும் செல்வதில்லையா? ஏனைய சில அமைச்சுக்கள் அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாகவா இயங்குகின்றன?

நாட்டுக்கு தற்போதைய சூழ்நிலையில் ஸ்தீரமான அரசாங்கம் ஒன்று அவசியம் என்பதும் சக்திமிக்க தலைவர் ஒருவர் வேண்டும் என்பதுமே அனைத்து மக்களதும் உணர்வாகும்.

ஏனெனில், தேசிய ரீதியாக மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் இந்த அரசாங்கம் நம்பிக்கையிழந்து விட்டது.

2015 ஜனாதிபதித் தேர்தலில் இருந்து, இந்த மூன்று வருடங்களில் தேசிய- சர்வதேச ரீதியாக நாடு படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்மெனில் அரசாங்கம் உடனடியாக தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும் என்பதுதான் எமது கருத்தாக இருக்கின்றது” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*