sajith

வடக்கு – கிழக்கில் பெரிய புத்தர் சிலைகளை அமைக்க நடவடிக்கையாம்!

வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட நாட்­டி­லுள்ள அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் பெரிய புத்­தர் சிலை­களை அமைக்­க­வுள்­ள­தாக வீட­மைப்பு மற்­றும் நிர்­மா­ணத்­துறை அமைச்­சர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்­தார்.

பத்­த­ர­முல்­லை­யில் நடை­பெற்ற முன்­னாள் அரச தலை­வர் ரண­சிங்க பிரே­ம­தா­ச­வின் நினைவு தினம் தொடர்­பில் தெளி­வு­ப­டுத்­தும் செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

முன்­னாள் அரச தலை­வர் ரண­சிங்க பிரே­ம­தா­ச­வின் 94 ஆவது பிறந்த தினத்­தை­யொட்டி நாட­ளா­விய ரீதி­யில் மாபெ­ரும் புத்­தர் சிலை­களை நிர்­மா­ணிக்­க­வுள்­ளோம்.

வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் இந்த வேலைத்­திட்­டம் முன்­னெ­டுக்­கப்­ப­டும். எதிர்­வ­ரும் 23 ஆம் திகதி இந்த வேலைத் திட்­டத்தை அநு­ரா­த­பு­ரத்­தி­லி­ருந்து ஆரம்­பிக்­க­வுள்­ளோம் – என்­றார்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் அறிக்­கை­யில் வடக்கு – கிழக்­கில் ஆயி­ரம் விகா­ரை­கள் நிறு­வு­வது தொடர்­பில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*