Manivannan

மணிவண்ணனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை யாழ்.நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூல் சார்பில் பொலிஸில் வழங்கப்பட்ட முறைப்பட்டிருக்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த விசாரணையானது நேற்று (புதன்கிழமை) யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது எதிராளியான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மன்றில் முன்னிலையாகவில்லை. அவருக்கு உரிய அழைப்பாணை வழங்கப்படவில்லை என மன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், ஒரு சுயாதீன ஆணைக்குழுவின் உறுப்பினரான எனது முறைப்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கே பொலிஸார் பின் நிற்பதாக இரட்ணஜீவன் கூல் பொலிஸார் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

என் மீதான அவதூறு தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் உரிய விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுக்கவில்லை என்றும் அவர் நீதிமன்றில் தெரிவித்தார்.

அதனை ஆராய்ந்த நீதிவான், வாக்குமூலம் ஒன்றை பொலிஸாருக்கு வழங்குமாறு பணித்தார். இதற்கு எழுத்துமூல சமர்ப்பணத்தை மன்றில் முன்வைப்பதாக முறைப்பாட்டாளர் தெரிவித்தார். அதனை தனிப்பட்ட சமர்ப்பணமாக முன்வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வாக்குமூலம் ஒன்றை பொலிஸாருக்கு வழங்குமாறு பணித்தது.

மேலும் இந்த வழக்கு விசாரணையை ஓகஸ்ட் 8 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம், சட்டத்தரணி வி.மணிவண்ணனை மன்றில் முன்னிலையாக வேண்டும் என அழைப்பாணை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*