rape

யாழில் மாணவிகளை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது!

தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற பதின்ம வயது சிறுமியை வன்புணர்ந்தமை மற்றும் சிறுமிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டையைச் சேந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாதாக, காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வட்டுக்கோட்டையிலுள்ள பிரபல பாடசாலை ஆசிரியரான அவரை, பாடசாலை நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.

“வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியரிடம் கல்வி கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகள் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என சங்கானை பிரதேச சிறுவர் அலுவலகருக்கு முறைப்பாடுகள் கிடைத்தன.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்ய மாணவிகளின் பெற்றோர்கள் தனக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என பிரதேச சிறுவர் அலுவலகர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சிறுவர் அலுவலகருடன் காவற்துறையினர் இணைந்து முன்னெடுத்த விசாரணையில் மாணவிகள் மூவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

அவற்றை அடிப்படையாக வைத்து பதின்ம வயது சிறுமியை வன்புணர்ந்தமை, மற்றும் சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை உள்ளட்ட குற்றச்சாட்டில் ஆசிரியர் இன்று கைது செய்யப்பட்டார். விசாரணைகளின் பின்னர் அவர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்” என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் வட்டுக்கோட்டையில் பிரபல பாடசாலையில் கற்பிக்கின்றார். அவரை பாடசாலையிலிருந்து நீக்குமாறு பாடசாலை நிர்வாகத்துக்கு பழைய மாணவர் சங்கமும் பெற்றோரும் கடும் அழுத்தங்களை வழங்கினர். இந்த நிலையில் ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னகர்வுகள் தொடர்பில் காவற்துறையினர், பாடசாலை அதிபருக்கு அறிவித்திருந்தனர். அதனையடுத்து ஆசிரியரை பாடசாலையிலிருந்து இடைநிறுத்துவதாக பாடசாலை அதிபர் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*