rajeev

ராஜீவ் கொலை குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிக்க தயாராகிறதா அரசு?

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக, வழக்கு சார்ந்த தகவல்களை வழங்குமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ராஜிவ் படுகொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் கடிதத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கில் மத்திய அரசு உரிய முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே 7 பேரின் உடல்நிலை, மனநிலை, குடும்ப சூழல் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*