Fisherman

மன்னார் மீனவர்கள் மாத்தறை கடற்பரப்பில் மீட்பு!

தலைமன்னார், ஊருமனை பகுதியில் கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இரண்டு பேர் காணாமற்போயுள்ள நிலையில்  மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற இவர்கள் கரை திரும்பவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதன் காரணமாக காணாமற்போனவர்களை தேடும் நடவடிக்கைகளில் கடற்படையினரும் ஈடுபட்ட வந்தநிலையில், இலங்கை விமானப்படை உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இருவரும், மாத்தறை கடற்பரப்புப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார்.

இவ்வாறு காணாமற்போனவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*