fish

மன்னார் கடலில் மீனவர்கள் இருவரைக் காணவில்லை!

கடற்­றொ­ழி­லுக்­குச் சென்ற இரு மீன­வர்­க ­ளைக் காண­வில்லை. சக மீன­வர்­கள் பட­கு­க­ளில் தேடு­தல் நடத்தி வரு­கின்­ற­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. தலை­மன்­னார் மேற்கு கிராமப் பகு­தி­யி­லி­ருந்து நேற்று முன்­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை தலை­மன்­னார் மேற்­கைச் சேர்ந்த சகோ­த­ரர்­க­ளான தோ. கிறிஸ்­ரின் கூஞ்ஞ, தோ.எமல்­ரன் கூஞ்ஞ இரு­வ­ரும் நண்டு வலை­யைக் கரை சேர்ப்­ப­தற்­காக பட­கில் சென்­றுள்­ள­னர். நேற்­றி­ர­வு­வரை அவர்­கள் கரை­சே­ர­வில்லை.

இத­னால் தலை­மன்­னார் மேற்­கைச் சேர்ந்த நாற்­பது மீன­வர்­கள் பத்துப் பட­கு­க­ளில் தேடு­த­லில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

இரு­வ­ரும் பய­ணித்த படகு இயந்­தி­ரம் பழு­த­டைந்­தி­ருந்­தால் யாழ்ப்­பா­ணம் அல்­லது இந்­தி­யாவை அண்­மித்­துச் சென்­றி­ருக்க வேண்­டும். வட கட­லிலே இவர்­கள் தங்­கள் தொழிலை மேற்­கொண்­ட­தால் அதற்­குச் சாத்­தி­யமுள்­ளது. அத­னை­யும் கவ­னத்­திற் கொண்டு தேடு­தல் நடத்­தப்­ப­டு­கி­றது.

சில நாள்­க­ளாக கடும் காற்­றும் கடல் கொந்­த­ளிப்­பும் காணப்­ப­டு­கி­றது. அத­னால் கட­லில் போடப்­பட்ட வலை­க­ளுக்­குச் சேதம் ஏற்­ப­டா­மல் வலைத் தொகு­தியை மீட்­கும் நோக்­கில் கட­லுக்­குச் சென்­றி­ருந்­த­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*