sangakkara001-720x450

ஜனாதிபதி வேட்பாளராக குமார்சங்ககார?!

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டம் தீட்டப்படுகின்றது என்று கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அன்னம் சின்னத்தின் பொது வேட்பாளராக சங்கக்காரவை களமிறக்க ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.< கோத்தபாயவுக்கு இணையாக குமார் சங்கக்காரவை களமிறக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

குமார் சங்கக்காரவை அரச தலைவர் வேட்பாளராக களமிறக்க வெளிநாட்டு ராஜதந்திரிகள் மற்றும் தூதரகங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. வடக்கு, கிழக்கு உட்பட சிறுபான்மையினரின் வாக்குகளை இலகுவாக சங்கக்கார ஈர்ப்பார் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த யோசனை இன்னமும் கலந்துரையாடல் மட்டத்தில் உள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் இந்த திட்டத்திற்கு இணங்கவில்லை என தெரியவந்துள்ளது. கட்சியின் அடுத்த அரச தலைவர் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று கொழும்பு ஊடகத்தைச் சுட்டிக்காட்டிச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, தற்போதைய நல்லாட்சி அரசு அதிகாரத்திற்கு வந்தபோது குமார் சங்கக்காரவுக்கு பிரதான நாடொன்றுக்கு வெளிநாட்டு தூதுவர் பதவி வழங்கப்பட்ட போதிலும் அவர் அதனை நிராகரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*