sl-china

சீனப்பிரஜை ஒருவரைக் காணவில்லை என முறைப்பாடு!

இலங்கைக்கு வருகை தந்த சீன பிரஜையொருவர் காணாமல் போயுள்ள நிலையில், அவரை தேடும் நடவடிக்கையில் இலங்கை பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் பகுதிகளை கடந்த 12ஆம் திகதி பார்வையிட சென்ற அவர்,  அதனை தொடர்ந்து  தெனியாய காட்டுப்பகுதிக்குச் சென்றபோதே காணாமல் போயுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் இராணுவத்தினரின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

தேடுதல் நடவடிக்கையின்போது, காணாமல்போன சீனப் பிரஜையின் தொலைப்பேசி, மேற்சட்டை மற்றும் பாதணிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சீனப் பிரஜையின் மாயம் பல மர்மங்களை தோற்றுவித்துள்ள நிலையில், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*