iranaitheevu

இரணைதீவு மக்களின் போராட்டத்துக்கு வெற்றி!!

கிளிநொச்சி , இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

190 குடும்பங்களுக்கு தமது அன்றாடக் கடமைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் மே மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இம் மக்களின் கவனவீர்ப்புப் போராட்டம் 359 ஆவது நாளாக நேற்றும் தீர்வின்றித் தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கிளிநொச்சி – இரணைதீவில் நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை, கொழும்பிலிருந்து சென்ற உயர்மட்டக் குழுவினர் சந்தித்துள்ளனர்.

மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.பி.ஆர்.ராஜபக்ஷ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் எஸ்.எஸ்.ரணசிங்க, மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் பிரேமச்சந்திரன், கொமாண்டர் டி.எஸ்.ஏ.பி.சமரசிங்க, லெப்டிணன்ட் கொமாண்டர் எம்.கே.எம்.பெர்னாண்டோ ஆகியோர் விசேட விமானம் மூலமாக இரணைதீவு சென்றிருந்தனர்.

இவர்களுடன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், புநகரி பிரதேச செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் சென்றிருந்தனர்.
இரண்டு தசாப்த காலமாக கடற்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள இரணைதீவை விடுவிக்குமாறு கோரி, அம்மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போராடி வருவதோடு, கடந்த ஒருமாத காலமாக இரணைதீவிற்குள் சென்று போராடி வந்தனர். இந்நிலையில், இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்கும் நோக்கில் இன்றைய சந்திப்பு இடம்பெற்று வந்த நிலையிலேயே மக்களுக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*