mulli

முள்ளிவாய்க்கால் குறித்த கலந்துரையாடலில் யாழ்.பல்கலைக்கழக ஒன்றியம் பங்கேற்கவில்லை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பிலான கலந்துரையானலொன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னரும் முதலமைச்சர் தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன்போது, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை மாகாண சபையின் ஏற்பாட்டில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. அத்தீர்மானத்துக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனையடுத்து இன்று இடம்பெறும் கலந்துரையாடலில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை கலந்து கொள்ளுமாறு முதலமைச்சர் அழைப்புவிடுத்திருந்தார்.

எனினும், குறித்த கலந்துரையாடலில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*