ranjan

பதவி மோகத்தால் திண்டாடும் ஆளுங்கட்சி பிரமுகர்!

நாட்டில் பொய் சொல்பவர்களுக்கும், திருடுபவர்களுக்கும், கொள்ளையடிப்பவர்களுக்கும் மற்றும் ஊழலில் ஈடுபடுகின்றவர்களுக்குமே உயரிய பதவிகள் கொடுக்கிறார்கள். ஆனால் உண்மையாகப் பணியாற்றுபவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் கொடுப்பதில்லை என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை நியமனத்தின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு அமைச்சுப் பதவியை எதிர்பார்தே இந்த அமைச்சரவை நியமன நிகழ்விற்கு வந்தோம். ஆனா முறையான பதவி எங்களுக்கு கிடைக்கவில்லை.

இனிமேல் நாங்களும் அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவி கிடைக்கவேண்டுமானால் இதேபோன்ற வேலைகளைச் செய்தாலே கிடைக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று பிரதியமைச்சர்கள் பதவி வழங்கும் நிகழ்வின் போது ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*