sajith

நாடாளுமன்ற புனரமைப்புக்கு நிதி; சஜித் கடும் விமர்சனம்!

நாடாளுமன்றத்தை புனரமைப்புச் செய்ய ஒதுக்கப்படவுள்ள 100 கோடி ரூபாயில், 80 கிராமங்களை உருவாக்க முடியும் உருவாக்க முடியும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரதிகள் 225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தை புனரமைப்புச் செய்ய ஒதுக்கப்படவுள்ள 100 கோடி ரூபாய், குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘குறித்த நிதியில் வீடில்லாத 2000 குடும்பங்களுக்கு வீடமைத்துக் கொடுக்க முடியும். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியை புனரமைப்புச் செய்ய இவ்வளவு அதிகளவு நிதி ஒதுக்கப்படுவது தேவையற்றது.

மக்கள் நாடாளுமன்றத்துக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்தது அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே அன்றி சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு அல்ல.

இதற்கு ஒதுக்கப்படவுள்ள 100 கோடி ரூபாவும் எனது அமைச்சுக்கு வழங்கப்பட்டால், 25 வீடுகளைக் கொண்ட 80 கிராமங்களை உருவாக்க முடியும்’ என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*