ostin

நாடாளுமன்றத்தை கலைக்கும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லையாம்!

ஜனாதிபதி சிறிசேனவுக்கு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் எண்ணம் இல்லை என்று ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு தொடக்கம் மே 8ஆம் திகதி வரை நாடாளுமன்றத்தை முடக்கும் வர்த்தமானி அறிவிப்பு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து பிபிசி சிங்கள சேவைக்கு கருத்து வெளியிட்ட போதே ஒஸ்ரின் பெர்னான்டோ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 70 (3) பிரிவு நாடாளுமன்றத்தை முடக்கி விட்டு, கலைப்பதற்கான அதிகாரத்தை அரச தலைவருக்கு வழங்கியுள்ளது. எனினும், அவ்வாறான நோக்கம் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடையாது.

இதற்கு முன்னரும் பதவியில் இருந்த அரச தலைவர்கள் கூட பலமுறை நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளனர். அரசியலமைப்பின் 70 (1) பிரிவின் கீழ் நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளஅரச தலைவர் நாடாளுமன்றக் கூட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் நாளையும் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*