hareen

சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

சமூக வளைத்தளங்களில் வெறுக்கத்தக்க கருத்துக்களை பரப்புதல் மற்றும் போலி தகவல்களை பரப்புவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்போவதாக, டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் அடுத்த மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது இந்த சமூக வலைத்தளமாகும். அதன் தாக்கத்தை அரசாங்கம் நன்கு அனுபவித்தது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகையால சமூக வளைத்தளங்களில் முன்னெடுக்கப்படுகின்ற தவறான செயற்பாடுகளை தடுப்பதற்கு தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு தொடர்பான சட்ட வரைபை உருவாக்குவதற்கு அமைச்சரவை குழு ஒன்றை நியமித்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

குறித்த குழுவில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, நிதி அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பிரதிநிதிகள் ஆகியோருடன் நானும் அங்கம் வகிக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*