mahinda

பிரேரணை தோல்விக்குக் காரணம் மைத்திரி என்கிறார் மஹிந்த!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தாலும், தமக்கு வெற்றியே என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு முடிந்த பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ,

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால் முடிவு மாறியிருக்கும்.

முதலில் எமக்கு 54 வாக்குகள் தான் இருந்தன. இப்போது 76 வாக்குகளாக அதிகரித்துள்ளது. இது எமக்கு வெற்றிதான்” என்று அவர் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணை தோல்விக்கு யார் காரணம் என ஊடகவியலாளர்கள் திரும்பத்திரும்ப வினவியபோது பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி தற்போதைய ஜனாதிபதி ஆதரவாகச் செயற்பட்டிருந்தால் நிச்சயம் வெற்றிகிடைத்திருக்கும். அவர் அப்படி நடக்கவில்லை என ஏமாற்றம் கலந்த முகபாவனையை வெளிப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*