al hussein

வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள இராணுவ அதிகாரிகளுக்கு சிக்கல்!

போர் குற்றங்கள் தொடர்பில் விசேட நீதிமன்றம் நிறுவப்படாவிடின் வெளிநாட்டிலுள்ள இலங்கை இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படும் நிலைமை உருவாகலாமென, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ளது.

விசேட நீதிமன்றம் ஒன்றை இலங்கை நிறுவாவிட்டால் சர்வதேச நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பான விடயத்தை எதிர்க்கொள்ள நேரிடுமென ஐ.நா. ஆணையாளர் செயிட் அல்ஹுசைன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் சர்வதேச நீதிமன்ற கட்டமைப்பு 139 ஐரோப்பிய நாடுகளில் இயங்குகின்றது. இந்த நாடுகளுக்கு போர் குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினரின் பெயர் பட்டியலை அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தற்போது வெளிநாடுகளிலுள்ள இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*