ranil-wickremesinghe-1

மறுசீரமைப்பு குழுவினை சந்திக்கிறாராம் ரணில்!

ஐக்­கிய தேசியக் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு குழு­வினை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாளை வியா­ழக்­கி­ழமை சந்­திக்­க­வுள்ளார். அத்­துடன் கட்சி மறு­சீ­ர­மைப்பு குறித்து ஆராய்­வ­தற்கு கட்­சியின் செயற்­கு­ழுவும் நாளை கூட­வுள்­ளது.

Image result for ரணில் விக்கிரமசிங்க

இதன்­படி ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கட்­சியின் செயற்­குழு நாளை வியா­ழக்­கி­ழமை சிறி­கொத்­தாவில் கூட­வுள்­ளது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு குறித்து தற்­போது பர­வ­லாக பேசப்­பட்டு வரு­கின்­றன. இதன்­படி பிர­த­ம­ரினால் நிய­மிக்­கப்­பட்ட ஐக்­கிய தேசியக் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு குழுவின் அறிக்கை நேற்று முன் தினம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த அறிக்­கையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் அடுத்த தலைவர் யார் என்­ப­தனை பெய­ரிட வேண்டும் என்­ப­துடன் பிரதி தலை­வ­ருக்கு கூடு­த­லான அதி­கா­ரங்கள் வழங்க வேண்டும் என்றும் கட்­சியின் பத­வி­க­ளுக்கு செயற்­தி­றன்­மிக்­க­வர்­களை அமர்த்த வேண்டும் எனவும் கூறப்­பட்­டுள்­ளது.

எனவே கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு குழுவின் அறிக்கை குறித்து ஆராய்­வ­தற்கும் பதவி மாற்­றங்கள் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு நாளை வியா­ழக்­கி­ழமை கூட­வுள்­ளது.

அத்­துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குழுவினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை வியாழக்கிழமை சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*