thimbu map

திம்புப் பிரகடனம் – 1985

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி [EPRLF] ஈழப் புரட்சி அமைப்பு [EROS], தமிழீழமக்கள் விடுதலைக் கழகம்[PLOTE], தமிழீழ விடுதலைப் புலிகள் [LTTE], தமிழீழ விடுதலை இயக்கம் [TELO], மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி [TULF] ஆகியவற்றைக் கொண்டதான தமிழ்த் தூதுக் குழுவால் 13-யூலை – 1985 அன்று விடப்பட்ட கூட்டறிக்கை.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான பயனுள்ள தீர்வெதுவும் பின்வரும் நான்கு முக்கிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமென்பது எமது ஆழ்ந்தாராய்ந்த கருத்தாகும்.

1. இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப் படுத்தல்.
2. இலங்கையிலுள்ள .தமிழர்களுக்கு இனங்காணப்பட்ட ஒரு தாயகம் உள்ளதென்பதை அங்கீகரித்தல்.
3. தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்.
4. இத்தீவைத் தமது நாடாகக் கருதுகின்ற எல்லாத் தமிழர்களினது பிரசாவுரிமையையும் அடிப்படை உரிமைகளையும்,அங்கீகரித்தல்.

இக்கோட்பாடுகளை உறுதிப்படுத்துவதற்கு வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு அரசாங்க முறைமைகளை வகுத்தமைத்துள்ளன.

எமது மக்களுக்கு இந்த அடிப்படை உரிமைகளை மறுத்ததனால் எழுந்துள்ள இப்பிரச்சினைக்குப் பதிலளிப்பாக நாம் சுதந்திரமான தமிழ் அரசொன்றைக் கோரியுள்ளதுடன் அதற்காகப் போராடியும் வந்துள்ளோம்.

இப்பிரச்சினைக்கு அவர்களின் தீர்வாக இலங்கை அரசாங்கத் தூதுக் குழுவினரால் முன்வைக்கப் பட்டுள்ள ஆலோசனைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை.எனவே 1985 யூலை 12 ம் திகதிய எமது கூற்றில் நாம் தெரிவித்துள்ளவாறு அவற்றை நாம் நிராகரித்துள்ளோம்.

எனினும் சமாதானத்துக்கான எமது மனமார்ந்த விருப்பின் நிமித்தம், மேலே குறிப்பிட்ட கொட்பாடுகளுக்கிணங்க இலங்கை அரசாங்கம் எமக்கு முன்வைக்கும் ஆலோசனைகளின் தொகுதி எதனையும் நாம் பரிசீலனை செய்யத் தயாராயுள்ளோம்.

JOINT STATEMENT MADE BY THE TAMIL DELEGATION CONSISTINGOF EPRLF, EROS, PLOT, LTTE, TELO AND TULF ON THE CONCLUDING DAY OF PHASE I OF THE THIMPU TALKS ON THE 13th OF JULY 1985

It is our considered view that any meaningful solution to the Tamil national question must be based on the following four cardinal principles.

  1. Recognition of the Tamils of Sri Lanka as a nation.

    2.Recognition of the existence of an identified homeland for the Tamils in Sri Lanka.

  1. Recognition of the right of self determination of the Tamil nation.
  2. Recognition of the right to citizenship and the fundamental rights of all Tamils who look upon the island as their country.

 

Different countries have fashioned different systems of governments to ensure these principles.

We have demanded and struggled for an independent Tamil state as the answer to this problem arising out of the denial of these basic rights of our people.

The proposals put forward by the Sri Lankan government delegation as their solution to this problem is totally unacceptable. Therefore we have rejected them as stated by us in our statement of the 12th of July 1985.

However, in view of our earnest desire for peace, we are prepared to give consideration to any set of proposals, in keeping with the above mentioned principles, that the Sri Lankan government may place before.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*