arrest3

இனவாத கருத்துக்களை பரப்பிய குற்றச்சாட்டில் இராணுவ அதிகாரி கைது!

கொழும்பின் முன்னணி நட்சத்திர விடுதியின் பாதுகாப்பு பிரிவு முகாமையாளராக செயற்பட்ட கப்டன் சிறினாத் பெரேரா என்ற இராணுவ அதிகாரி சமூக வலைத்தளங்கள் மூலமாக இனவாதத்தை பரப்பியது தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இராணுவ அதிகாரி குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் அதிகாரிகளினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் மூலமாக இனவாதத்தை பரப்பியதுடன், இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை மற்றும் சைபர் வழியாக நெறிமுறைகளை மீறி இளைஞர்களை கோபப்படுத்தும் வகையில் பதிவுகள் வெளியிட்டமை போன்ற குற்றச்சாட்டில் இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*