fish

முல்லைத்தீவில் காணமல் போன மீனவர்களை தேடும் நடவடிக்கை தொடர்கிறது!

முல்­லைத்­தீவு, நாயாற்­றில் தொழி­லுக்­குச் சென்ற 3 மீன­வர்­கள் கரை திரும்­ப­வில்லை. ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த இவர்­க­ளைத் தேடும் பணி­கள் முடுக்கி விடப்­பட்­டுள்­ளன.

தேடுதல் நடவடிக்கைக்காக முல்லைத்தீவு மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு வானூர்திப் படையின் உதவியை நாடியுள்ளது எனத் தெரியவருகிறது.

நீர்­கொ­ழும்­பைச் சேர்ந்த 3 மீன­வர்­களே கரை திரும்­ப­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது. இது தொடர்­பாக முல்­லைத்­தீவு பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

நாயாற்­றைச் சேர்ந்த மீன­வர்­கள் நேற்­றுக் காலை பட­கு­க­ளில் தேடு­தல் நடத்திய­ போ­தும் அது பய­ன­ளிக்­க­வில்லை. மீன­வர்­க­ளைத் தேடும் பணி­கள் தொடர்­கின்­றன என்று தெரி­விக்­கப்­பட்­டது.

வழ­மை­யாக 8 முதல் 10 பாகத்­தில் வளை வளைப்­பதே வழமை என்­றும், இவர்­கள் 18 பாகத்­தில் வலை வளைத்­து­விட்டு வலையை எடுக்­கச் சென்­ற­போதே இந்­தச் சம்­ப­வம் நடந்­துள்­ளது என்­றும் பிர­தேச மீன­வர்­கள் கூறுகின்றனர்.

அதே­வேளை, நேற்­று­முன்­தி­னம் கடல் சீற்­றம் அதி­க­மா­கக் காணப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அத்தோடு காணாமல் போன மீனவர்களை தேடுவதற்கு கடற்படைக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*