kaanaamal aa

காணாமல் போனோர் குறித்த அலுவலகம் வாக்குறுதி!

காணாமல் போனவர்களின் அன்புக்குரியவர்களுக்கான பணிகள் பாரபட்சமின்றி, நல்நோக்கத்துடன் நிறைவேற்றப்படும் என காணாமல்போனோர் குறித்த அலுவலகம் உறுதி வழங்கியுள்ளது.

காணாமல் போனோர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட முதலாவது ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”நீண்டகால காத்திருப்பு காணாமல் போனவர்களது அன்புக்குரியவர்களின் துன்பத்தையும், விரக்தியையும் ஆழமாக்கியுள்ளது.

அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்களினால் காணாமல் போனோர் குறித்து பல ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்ட போதிலும் உறவுகளை தொலைத்த அன்புக்குரியவர்களின் தேடல் இன்னும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவையாற்றுவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள எமது அலுவலகமானது, இனம், மதம் மற்றும் பிராந்தியம் ஆகியவற்றிற்கு அப்பால் அவர்களது துன்பத்தை போக்குவதற்கு கவனத்தில் எடுக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.

மேலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுதல், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உரிமைகளை பாதுகாத்தல், இவ்வாறான சம்பவம் மீள நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை நாம் நிறைவேற்ற தயாராகவுள்ளோம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*