thamarai

தாமரை இலை பறிக்கப் போன ஐவர் பலி! திருமலையில் பரிதாபம்!

திருகோணமலை மாவட்டம் நிலாவெளி, பெரிய குளத்தில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

நேற்றுப் பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குளத்தில் தாமரை இலை பறித்துக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆண்கள் மூவரும் பெண்கள் இருவரும் உள்ளடங்குவதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*