rajitha

கண்டி வன்முறைகளைத் திட்டமிட்டது தனி ஒருநபர் – ராஜித தெரிவிப்பு!

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்துக்கு காரணமானவர்கள் தொடர்பான சகல தகவல்களும் திரட்டப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பேருவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கண்டி கலவரம் ஒரு தனிநபரினால் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினால் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் உரியவர் இனங்காணப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் ராஜித தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*