Mano-Ganesan-01

நாடாளுமன்ற உறுப்பினர்களை பாடசாலைக்கு அனுப்பவேண்டும் என்கிறார் மனோ!

எமது நாடா­ளு­மன்­றத்­தில் உள்ள 225 உறுப்­பி­னர்­க­ளை­யும் பாட­சா­லை­க­ளுக்கு அனுப்­புங்­கள். மீண்­டும் பாட­சா­லைக்குச் சென்­றா­வது அவர்­கள் ஒழுக்­கத்தை கற்­றுக் கொள்ள முயற்­சிக்­கட்டும் என்று அமைச்­சர் மனோ கணே­சன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு – டட்லி சேனா­நா­யக்க வித்­தி­யா­ல­யத்­தில் நேற்­றுப் புதன்­கி­ழமை இடம்­பெற்ற சகோ­த­ரத்­துவ தைப்­பொங்­கல் விழா­வில் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­தா­வது-,

எமது நாட்­டின் நாடா­ளு­மன்­றத்­தில் கடந்த வாரம் அமைச்­சர்­க­ளுக்­கி­டை­யி­லும் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு இடை­யே­யும் மல்­யுத்­தம் நடந்­தது. அவர்­கள் பாட­சாலை மாண­வர்­க­ளைப் போல் நாடா­ளு­மன்­றத்­தில் சண்­டை­யிட்­டுக் கொள்­கின்­ற­னர். அது மாத்­தி­ர­மல்ல. நேற்று முன்­தி­னம் அமைச்­ச­ர­வை­யில் அரச தலை­வர் மனம் வருந்­தும் படி­யான சம்­ப­வங்­கள் நடை­பெற்­றுள்­ளன. இவ்­வா­றான சம்­ப­வங்­களை நினைத்து நான் வெட்­கப்­ப­டு­கின்­றேன்.

நாட்­டின் குடி­மக்­கள் மாத்­தி­ர­மன்றி அரச தலை­வர் முதற்­கொண்டு தலைமை அமைச்­சர் வரை அனை­வ­ரும் சக வாழ்வை பின்­பற்ற வேண்­டும்.

சாதா­ரண மக்­க­ளி­டத்­தில் இந்­தப் பிரச்­சினை இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. தற்­போது சகோ­தர மொழிப் பாட­சா­லை­யில் தைப்­பொங்­கல் தினத்தை மாண­வர்­கள் ஒற்­று­மை­யு­டன் கொண்­டா­டு­கின்­ற­னர். இவர்­க­ளைப் பார்த்து அமைச்­சர்­கள் கற்­றுக் கொள்ள வேண்­டும்.

நான் ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் பெற்­றோர்­க­ளுக்­கும் ஒரு வேண்­டு­கோள் விடு­கின்­றேன். தயவு செய்து பாட­சாலை மாண­வர்­களை நாடா­ளு­மன்­றத்­திற்கு அனுப்­பா­தீர்­கள். மாண­வர்­க­ளின் ஒழுக்­கத்­துக்கு அது பாது­காப்­பல்ல – என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*