vasudeva

மஹிந்த – மைத்திரி பனிப்போர் வெடிக்கும் என்கிறார் வாசுதேவ!

அரச தலை­வர் மைத்­தி­ரிக்­கும், தலைமை அமைச்­சர் ரணி­லுக்­கும் இடை­யில் இடம்­பெற்­று­வ­ரும் நீண்­ட­கா­லப் பனிப்­போர் தேர்­தல் பெறு­பே­று­க­ளு­டன் வெடிக்க ஆரம்­பிக்­கும். அரச தலை­வர் மைத்­திரி தனது பத­விக்­கா­லம் தொடர்­பில் உயர் நீதி­மன்­றில் வின­வி­ய­தும் இதன் ஓர் அங்­க­மா­கும் என்று ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணி­யின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்­தார்.

சோசலிச மக்­கள் முன்­னணி கொழும்­பில் நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அர­சுக்­குள், அரச தலை­வர் மைத்­திரி மற்­றும் தலைமை அமைச்­ச­ருக்­கு இடை­யில் நீண்ட கால­மாக அதி­கா­ரப் பனிப்­போர் இடம்­பெற்று வரு­கின்­றது. தலைமை அமைச்­சர் ரணில், அரச தலை­வர் மைத்­தி­ரியை முந்­திக்­கொண்டு அர­சின் பிர­தான அதி­கா­ர­மு­டை­ய­வ­ராக செயற்­பட முயற்­சிக்­கின்­றார்.
அரச தலை­வர், தலைமை அமைச்­சரை முந்­திக்­கொண்டு அர­சின் அதி­கா­ரங்­களை செயற்­ப­டுத்த முயற்­சிக்­கி­றார். அதன் பிர­கா­ரம் தலைமை அமைச்­சர் நாடா­ளு­மன்­றத்­தி­னூ­டாக அர­சின் சில அதி­கா­ரங்­களை தனக்கு கீழ் கொண்­டு­வந்­துள்­ளார்.

மைத்­திரி மற்­றும் ரணி­லுக்கு இடை­யில் இடம்­பெற்­று­வ­ரும் இந்­தப் பனிப்­போர் விரை­வில் வெடிக்­கும். அதற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது எமது கடமை.

இதன் மூலம் இந்த அரசை வீழ்த்­தும் போராட்­டம் வெளிப்­ப­டும். உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லின் பின்­னர் அர­சில் இருக்­கும் அனைத்துக் கட்­சி­க­ளுக்­கும் பெரி­ய­தொரு தோல்வி ஏற்­ப­டு­வது உறு­தி­யா­கும். இதன் மூலம் நாட்­டுக்­குள் பெரிய அர­சி­யல் குழப்­பம் ஏற்­ப­டு­வது யதார்த்­தம்.

மக்­கள் ஆணை இல்­லாத அரசு என்ற போராட்­டத்தை மக்­கள் நாடு முழு­வ­தும் மேற்­கொள்­வதை தவிர்க்க முடி­யா­மல் போ­கும். இதன்­மூ­லம் இந்த அரசு வீட்­டுக்­குச் செல்­லும் நிலை ஏற்­ப­டும். மைத்­திரி, ரணில் இடை­யில் இடம்­பெ­றும் அதி­காரப் போராட்­ட­மும் இதற்கு வாய்ப்­பாக இருக்­கின்­றது.

இந்த அதி­காரப் போராட்­டத்­தின் மற்­று­மொரு அங்­க­மா­கவே அரச தலை­வர் தனது பத­விக்­கா­லம் தொடர்­பில் உயர் நீதி­மன்­றில் கேட்­டுள்­ளார் – –என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*