susilperem

ஜனாதிபதி ஆட்சிக்காலம் குறித்து விசாரித்தது தேர்தல் நடத்தவே என்கிறார் சுசில்!

ஜனாதிபதித் தேர்­தலை நடத்­தும் காலத்தை அறிந்­து­கொள்­ளவே ஜனாதிபதியின் ஆட்­சிக் காலம் குறித்து வின­வப்­பட்­டதே தவிர ஜனாதிபதி தொடர்ந்­தும் ஆட்­சி­யில் நிலைத்து நிற்­ப­தற்­காக அல்ல என்று அமைச்­சர் சுசில் பிரே­ம­ஜ­யந்த தெரி­வித்­தார்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் செய்­தி­யா­ளர் சந்­திப்பு கட்­சித் தலைமை அலு­வ­ல­கத்­தில் நடை­பெற்­றது.

இதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது;

அர­ச­மைப்­பின் 19ஆம் திருத்­தம் மூல­மாக அரச தலை­வ­ரின் ஆட்­சிக்­கா­லம் ஐந்து ஆண்­டு­க­ளாக குறைக்­கப்­பட்டது.

அது தற்­போ­தைய ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் பொருந்­தும் ஒன்­றல்ல.

ஜனாதிபதித் தேர்­தலை எப்­போது நடத்­து­வது என்ற கேள்வி எழுந்த நிலை­யில் 2020ஆம் ஆண்டு தேர்­தலை நடத்த முடி­யும் என்று கூறப்­பட்ட நிலை­யில் சிலர் அதை மறுத்து 2021ஆம் ஆண்டு தேர்தலை நடத்­தவே அதி­கா­ரம் உள்­ள­தாக கூறி­னார்.

ஜனாதிபதித் தேர்­தலை அவர் ஐந்து ஆண்­டு­க­ளி­லும் நடத்த முடி­யும். அல்­லது ஆறா­வது ஆண்­டி­லும் அவர் ஆட்­சியை கலைக்க முடி­யும். முன்­னாள் ஜனாதிபதிகள் இத­னைச் செய்­த­னர்.
மகிந்த ராஜ­பக்ச இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் தேர்­தலை நடத்­தி­னார்.

சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க ஒரு ஆண்­டுக்கு முன்­னர் தேர்­தலை நடத்­தி­னார்.

ஜனாதிபதி மைத்திரி­பால சிறி­சே­ன­வும் தான் விரும்­பி­னால் இந்த ஆண்­டு­க­ளில் தேர்­தலை நடத்த முடி­யும். அது ஜனாதிபதியின் நிலைப்­பா­டாக அமை­யும். சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யாக எமது தீர்­மா­னம் அல்ல என்றும் சுசில் பிறேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*