soodaikuda

மூதூர் திருக்குமரன் ஆலய நிர்வாக உறுப்பினர்களுக்கு தண்டம் விதித்தது நீதிமன்று!

திருகோணமலை மாவட்டம் மூதூர் , சூடைக்­குடா மத்­த­ள­மலை திருக்­கு­ம­ரன் ஆல­யத்­தின் நிர்­வாக சபை உறுப்­பி­னர்­கள் உட்­ட­பட 7 பேருக்கு தலா 25 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதிக்கப்பட்டுள்ளது.

வர­லாற்று சிறப்பு மிக்க மூதூர் சூடைக்­குடா மத்­த­ள­மலை திருக்­கு­ம­ரன் ஆல­யத்­தில் கடந்த ஆண்டு மார்­கழி மாதத்­தில் ஆலய வளா­கத்தை சீர­ மைக்­கும் நோக்­கு­டன் நிலம் சமப்­ப­டுத்­தப்­பட்ட பணி­கள் இடம் பெற்று வந்­தன.

இந்­தப் பகு­தி­யில் தொல்­பொ­ருள் சின்­னங்­கள் காணப்­ப­டு­கின்­றன என்­றும், அவற்றை ஆலய நிர்­வா­கி­க­ளும் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த வேலை­யாள்­க­ளும் சேதப்­ப­டுத்­தி­னர் என்ற குற்­றச்­சாட்­டின் பேரில் சம்­பூர் பொலி­ஸா­ரால் கடந்த முத­லாம் திகதி வழக்குப் பதிவு செய்­யப்­பட்­டது.

சந்­தேக நபர்­கள் மூதூர் நீதி மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்டு கடந்த 4ஆம் திக­தி­வரை ஆலய நிர்­வா­கி­கள் மற்­றும் வாகன சாரதி உட்­பட நால்­வர் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­ட­னர்.
வேலை­யாள்­கள் மூவர் பொலி­ஸில் சர­ண­டைந்து நீத­வான் முன்­னி­லை­யில் பிணை­யில் விடு­தலை செய்­யப்­பட்­ட­னர்.

இவ் வழக்கு மீண்­டும் 4 ஆம் திகதி எடுத்­துக் கொள்­ளப்­பட்ட போது நேற்­று­வரை விளக்­க­ ம­றி­யல் நீடிக்­கப்­பட்­டி­ருந்து.

வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போது நீதிமன்றினால் தண்டம் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*