acci

கொக்காவில் பகுதியில் கோர விபத்து! நால்வர் பரிதாப மரணம்!

ஏ-9 வீதியின், முல்லைத்தீவு, கொக்காவில் பகுதியிலுள்ள 18ஆம் மைல் கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஹையேஸ் வாகனம் ஒன்று, கொக்காவில் ஏ-9 வீதியின் பழைய முறிகண்டிக்கு அண்மித்த 18ஆம் போர் பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரு ஏற்றிச்சென்ற லொறியுடன் மோதியதில், குறித்த விபத்துச் சம்பவித்துள்ளது.

இவ்விபத்து, நேற்றிரவு 8.35 மணியளவில் இடம்பெற்றது என, பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்விபத்தின் போது, ஹையேஸ் வாகனத்தில் பயணித்த நான்கு பேர், சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

இவ்விபத்துத் தொடர்பான விசாரணைகளை, மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, வாகனத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள், பொலிஸாரினதும் வீதியால் பயணித்த பொதுமக்களினதும் உதவியுடனும் மீட்கப்பட்டு, கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*