Front-Image-1

உள்ளூராட்சி சபைகளுக்கான அதிகாரங்கள் ”24”

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான பரபரப்புக்கள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்ற நிலையில் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் பெருமளவானவர்களுக்கே உறுப்புரிமைக்கு இருக்கின்ற அதிகாரங்கள் குறித்த தெளிவற்ற நிலை தொடர்வதாக தெரியவருகிறது.

1987 ஆம் ஆண்டு 15 இலக்க பாராளுமன்ற சட்டமூலத்தின் பிரகாரம் 24 அதிகாரங்கள் உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன . இந்த அதிகாரங்களுக்கு உட்பட்டே செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

குறிப்பிட்ட அதிகாரங்கள் வருமாறு,

*சபைக்கு தேவையான பதவிகளை உருவாக்கிக்கொள்ளல்.

*சபையின் தேவைக்காக பதவி அல்லது நியமனங்களை வழங்குதல் (பக்கச்சார்பு இல்லாது, உறவினர்கள் பாராது, ஊழல் இல்லாது நியமனங்களை வழங்கும் வாக்குறுதி )

*சபையில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கள்.

*தனது சேவையை சிறப்புச் செய்ய வேறு சபைகளுடன் ஒப்பந்தம் செய்தல்.

*தனது சபை இடப்பரப்பிலுள்ள அசையும் அசையாத சொத்துக்கள், ஆதனங்களை குறித்த அமைச்சின் ஊடாக உரித்தாக்குதல். (இராணுவத்திடம் உள்ள பொதுக்காணிகளை மீட்கும் வாக்குறுதி, தனியார் காணிகளை விடுவிக்க வழக்கு தொடருதல் )

*காணி, கட்டிடங்களை கொள்வனவு செய்தல், குத்தகைக்கு வழங்கல். (ஊழல் இல்லாது நடு நிலை பேணல் )

*படகுச்சேவையை ஆரம்பித்தல் (தீவகங்களுக்கான மேலதிக படகுச்சேவை வழங்கும் வாக்குறுதி )

*வேலைவாய்ப்பு திட்டங்களை ஒழுங்கமைத்தல்(மயானபராமரிப்பாளர்கள், சுத்திகரிப்பு தொழிலாளிகள் வேலைகள் )

*பிரதேச பாடசாலைகளை திருத்துதல், பெயர் சூட்டுதல், தரம் உயர்த்தல், மூடல் அதிகாரம். (ஊழல் இல்லாது செயற்படும் வாக்குறுதி, பெயரை பிரதேச வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் பெயரை சூட்டில் வாக்குறுதி )

*தனது நிதியத்திலிருந்து சிறுவர் , மகளிர் நலனோம்பு சேவைக்கு நிதி ஒதுக்குதல். (சுகாதார வசதிகள், பொருட்கள், சேவைகளை கொள்வனவு செய்யும் போது வெளிப்படைத் தன்மை பேணல் வாக்குறுதி )

*சயம, கலை இலக்கிய விழாக்களை ஒழுங்கமைத்தல், பரிசில் வழங்குதல்

*ஏழை நிவாரணம் வழங்கல்

இவற்றை விட சில குழுக்களை உருவாக்கும் அதிகாரமும் உள்ளன.

*நிநிக்கொள்கை குழு

*வீடமைப்பு சமூக சேவை குழு

* தொழில் நுட்ப சேவை வழங்கும் குழு

*சுற்றாடலும் வாழ்க்கை வசதிகள் குழு

எமது பிரதேசத்திற்கு அபிவிருத்தி செய்யக்கூடிய வேலைத்திட்டங்களுக்கான வாக்குறுதிகள்
*உள்ளூர் வீதிகள் அமைத்தல், புனரமைத்தல், பெயர் சூட்டல்

*வீதி மின் விளக்குகளை அமைத்தல்

*கழிவகற்றல்

*பிரதேசத்தை அழகு படுத்தல்

*மயானங்களை புனரமைத்தல்,பாதுகாத்தல்

*முன் பள்ளிகளை நடாத்துதல்

*பிரதேச நூலகங்களை அமைத்தல்

*தொற்று நோய்கள் பரவுவதை தடுத்தல்

*கட்டாக்காலிகளை அகற்றல்

*உரிய வகையில் கட்டட அனுமதிகள் வழங்கல்

*சனசமூக நிலையங்களுக்கு உதவல்

*விளையாட்டு மைதானங்களை உருவாக்கள், புனரமைத்தல்

*பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்தல்

*சிறுவர் பூங்காக்களை உருவாக்குதல்,

*பொது கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி பராமரித்தல்,

*சந்தை வசதிகளை ஏற்படுத்தல்

*கலாசார விழாக்களை நடாத்துதல்

*பொது நோக்கு மண்டபங்களை அமைத்தல்

*பயணிகள் நிழற்குடை அமைத்தல்

*மரங்கள் நாட்டுதல்

*குப்பைகளை அகற்றல்

*தாய் சேய் நலன் பேணல்

*வடிககால்களை புனரமைத்தல்

*குடி நீர் வசதிகளை ஏற்படுத்தல்

*ஊழலற்ற சேவை

*ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் பதவி விலகல்

*கட்சி பேதமின்றி சேவையாற்றல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*