tna

வாக்குக் கேட்டு ஈபிடிபி வேட்பாளர் வீட்டுக்குச் சென்ற கூட்டமைப்பு வேட்பாளருக்கு நேர்ந்த பரிதாபம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பரபரப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்ற நிலையில் சில அதிர்சிதரும் சம்பவங்களும் பதிவாகிவருகின்றன. தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் உத்தியோப்பற்றற்ற முறையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில் சாவகச்சேரியில் வித்தியாசமான அனுபவம் ஒன்று கூட்டமைப்பு வேட்பாளருக்கு நிகழ்ந்திருக்கிறது.

யாழ்ப்பாணம் சாகவச்சேரி நகரசபைத் தேர்தலுக்காக போட்டியிருக்கின்ற நகரசபையின் முன்னாள் உறுப்பினர் சற்குணதேவன் என்பவர் வீடு வீடுடாக வாக்குச் சேகரிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்.

இவ்வாறு செல்கின்ற போது ஆர்வக்கோளாறினால் ஈபிடிபி உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கும் சென்றிருக்கின்றார்.

அங்கிருந்த ஈபிடிபி வேட்பாளர் கூட்டமைப்பின் வேட்பாளர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதாகவும் குறித்த கூட்டமைப்பின் வேட்பாளர் தற்போது சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்றதாகவும் தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*