sumanthi

பிரித்தானியக் குழுவினரை தனியே சந்தித்த சுமந்திரன்!

சர்வதேச பிரதிநிதிகளுடன் தனியான சந்திப்புக்களில் ஈடுபட்டுவருகின்றமை தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் தொடர்பில் பலத்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்ற நிலையில் பிரித்தானிய பிரதிநிதிகளை தனியாக சுமந்திரன் சந்தித்துள்ளமை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

கூட்டமைப்பின் ஏனைய பிரநிதிகளை தவிர்த்து தனியான சந்திப்புக்களில் ஈடுபட்டுவருகின்ற சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் கொழும்பு ஆட்சியாளர்களின் குரலாக செயற்படுவதாக கடந்தகாலங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவந்திருந்தன.

இந்த நிலையிலேயே இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சிக் குழுவினரை சுமந்திரன் தனியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பில் நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகள், புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள், நாடாளுமன்றத்தில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் தான் விளக்கமளித்துள்ளதாக சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

இருப்பினும் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் தமிழ்மக்களையே ஏமாற்றும் வகையில் கருத்து வெளியிட்டுவருகின்ற சுமந்திரன் பிரித்தானிய பிரதிநிதிகளுடன் நேர்மையாக நடந்துகொண்டிருப்பாரா என அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*