HENDERSON, NV - OCTOBER 05:  Republican presidential nominee Donald Trump speaks during a campaign rally at the Henderson Pavilion on October 5, 2016 in Henderson, Nevada. Trump is campaigning ahead of the second presidential debate coming up on October 9 with Democratic presidential nominee Hillary Clinton.  (Photo by Ethan Miller/Getty Images)
HENDERSON, NV - OCTOBER 05: Republican presidential nominee Donald Trump speaks during a campaign rally at the Henderson Pavilion on October 5, 2016 in Henderson, Nevada. Trump is campaigning ahead of the second presidential debate coming up on October 9 with Democratic presidential nominee Hillary Clinton. (Photo by Ethan Miller/Getty Images)

அமெரிக்க எச்சரிக்கையை மீறியதால் நெருக்கடியை எதிர்கொள்ளப் போகும் இலங்கை!

இஸ்­ரே­லின் தலை­ந­க­ராக ஜெரு­ச­­லேமை அறி­வித்த அமெரிக் காவின் முடி­வுக்கு எதி­ராக ஐக்­கிய நாடு­கள் சபை­யில் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னத்தை ஆத­ரித்து வாக்­க­ளித்­தன் மூலம் அமெ­ரிக்­கா­வின் அதி­ருப்­திக்கு இலங்கை உள்­ளா­கி­யுள்­ள­து­டன், இது­வரை கால­மும் அந்த நாட்­டி­டம் இருந்து பெற்­று­வந்த நேரடி மறை­முக நிதி­களை இழக்­கும் அபாய நிலை­யும் தோன்­றி­யுள்­ள­து என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்த விவ­கா­ரம் தொடர்­பில் உள்­ளக மற்­றும் இரா­ஜ­தந்­திர மட்­டத்­தில் அரசு பேச்­சு­களை ஆரம்­பித்­துள்­ளது என வெளியுறவு அமைச்சு வட்­டா­ரங்­க­ளில் இருந்து அறி­ய­மு­டி­கின்­றது.

இந்­தத் தீர்­மா­னம் மீது நேற்­று­முன்­தி­னம் இரவு ஐ.நா. பொதுச் சபை­யில் வாக்­கெ­டுப்பு நடை­பெற்­றது. 128 நாடு­கள் ஆத­ர­வா­க­வும், 9 நாடு­கள் எதி­ரா­க­வும் வாக்­க­ளித்­தி­ருந்­தன. 35 நாடு­கள் வாக்­க­ளிப்­பில் கலந்­து­கொண்­டி­ருக்­க­வில்லை.

இலங்­கை தீர்­மா­னத்தை ஆத­ரித்­தி­ருந்­தது. இந்த விட­யம் அமெ­ரிக்­கா­வைக் கடும் அதி­ருப்­திக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளது என்று கொழும்பு இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

ஐ.நாவின் தீர்­மா­னத்துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­கும் நாடு­க­ளுக்கு அமெ­ரிக்­கா­வால் வழங்­கப்­பட்­டு­வ­ரும் நேரடி, மறை­முக நிதி­கள் நிறுத்­தப்­ப­டு­ம் என்று அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்­க­னவே மிரட்­டி­யி­ருந்­தார்.
இது­போன்ற வில்­லங்­க­மான தனது அறி­விப்­புக்­க­ளைச் செயற்­ப­டுத்­து­வ­தில் அவர் பெயர்­போ­ன­வர் என்­ப­தால், இலங்­கைக்­கும் ஆபத்து இருப்­ப­தா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது.

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் நெருங்­கி­யுள்­ள­தால் முஸ்­லிம் வாக்­கு­க­ளைக் கருத்­தில்­கொண்டு ஜெரு­ச­லேம் விவ­கா­ரத்­தில் இலங்கை அரசு நடு­நிலை வகிக்க முடி­யாத இக்­கட்­டான நிலைக்­குத் தள்­ளப்­பட்­டது என்று அர­சி­யல் அவ­தா­னி­கள் கூறு­கின்­ற­னர்.

தீர்­மா­னத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­துள்ள நாடு­கள் தொடர்­பில் அமெ­ரிக்கா கடும் அதி­ருப்தி அடைந்­துள்­ள­தால் அடுத்­து­வ­ரும் சில நாள்­க­ளில் ட்ரம்­பின் அதி­ர­டி­யான சில முடி­வு­கள் வெளி­வ­ரு­மென வெள்ளை மாளி­கையை மேற்­கோள்­காட்டி பன்­னாட்டு ஊட­கங்­கள் செய்­தி­களை வெளி­யிட்டு வரு­கின்­றன. ஏற்­ப­டப் போகும் பாதிப்­பு­கள் குறித்து உள்­ளக மற்­றும் இரா­ஜ­தந்­திர மட்­டத்­தில் இலங்கை அரசு தீவிர பேச்­சு­களை ஆரம்­பித்­துள்­ள­தா­க­வும் அறி­ய­மு­டி­கின்­றது.

அமெ­ரிக்­கா­வால் இலங்­கைக்கு 22 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர்­கள் வரு­டாந்­தம் நேரடி மற்­றும் மறை­முக நன்­கொ­டை­யா­கக் கிடைத்து வரு­கின்­றது. இந்த நிதிக்கு ஆபத்து வரக்­கூ­டும் என்று எதிர்­வு­கூ­றப்­ப­டு­கின்­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*